பக்கம்:மருதாணி நகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 15

கண்கள் மீண்டும் அதிசயம் பூண்டு விரித்தன. குந்தி யிருந்தவள், விசுக் கென்று எழுந்தாள் கைப்பிடியில் அசைந்தாடிய வேப்பங்கன்றை விலக்கிப் பார்த்தாள். யாரோ கூத்து நடத்திருப் போல, சத்தமுந்தி முனிசாமி கண்ணுட்டம் ஏதோ தெரிஞ்சிச்சு..இப்ப யாதொண்ணை யும் தடம் காண ஏலலேயே ? கண்கட்டு மாயமாங் காட்டி

யில்ல நடப்பு இருக்குது ?

தாரை, தம்பட்டம் ஒலி முழங்கின. மேளமும் மத்தள மும் முரசொலி கிளப்பின. உடுக்குச் சத்தம் வீரிட்டது. ஒலி வடிவத்தில் இயங்கி ஒளி வடிவம் பெற்றுத்திகழ்ந்த கூப்பிடு தொலைவு நிகழ்ச்சிகள் அவள் மனப் படுதாவில் நிழலாக உயிரூட்டின. *

வடித்திருந்த சோளக் கூழை எடுத்து ஆறவைத்து, ஆறு அகப்பை அள்ளி எடுத்து, குறிஞ்சிப்பாடி வட்டி யில் கொட்டினுள். நீராகாரம் ஊற்றினுள். உப்புக்கல் துரவினுள். கலக்கினுள். நாலுமடக்கில் குடித்தாள், ஊசி மிளகாயும், வெங்காயமும் நாக்கில் சூடு தந்து சுவை தந்தன. ஈரக்கையை அப்படியே புடவையில் அப்பித் துடைத்தாள். சுருக்குப் பையில் இருந்த வெற்றிலைச் சருகை எடுத்து மடித்து, பாக்குவெட்டிப்போட்டுக் கொண்டு, சுண்ணும்பை சிறுக எடுத்துக் குதப்பிளுள். வெளியே புறப்படப்போளுள் அவள்.

அப்போது, தேநீர் கேத்தல் அவளது கால் பட்டுத்

தடுமாறி விழுந்தது. கள்ளிப்பெட்டி கவிழ்ந்தது. துணி மணிகள் கவிழ்ந்தன. - -

அதே சமயத்தில், அவள் உடம்போடு மோதிய அந்த உருவத்தை உடும்புப் பிடி' யாகப் பற்றிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/17&oldid=611922" இலிருந்து மீள்விக்கப்பட்டது