பக்கம்:மருதாணி நகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மருதாணி நகம்

படிச்சிருக்கேன் ஒங்களுக்கு? கடோசியிலே, எம்புட்டு இருப்பு புரியாம, இருக்கிறவுங்க எம் மானத்தை வாங்கி றத்துக்கு முண்டாசு கட்டிக்கிட்டிருக்கிறது பத்தாதின் னுட்டு, நீங்க வேறேயா இப்ப எம் மானத்தைக் குடிச்சு ஏப்பம்விட ரோசிச்சுஇப்பிடித் தீவட்டிச் கொள்ளைக்காரன் மாதிரி பூந்து வந்து இருந்து என்னைக் கெடுக்கிறத்துக் குப் பார்த்தீங்க? துர!... துப்பில்லையா ஒங்களுக்கு ? இதுக்காவத்தான ஒங்க நிழலு இங்கிட்டாலே இத்தினை நாளும் படாம, ஒளிஞ்சிருந்தீங்க? ஐயையோ ! இனிமே நானு இந்தப் பூமாதேவிக்குச் சுமையா இருக்கிறதே தப்புக் காரியந்தான்! ஆத்தா சாக்காச்சியோ !” என்று கூக்குரலிட்டபடி அங்கிருந்து ஓடத் தலைப்பட்டாள்.

அடுத்த இமை கொட்டும் பொழுதில், அவள் தலையில் மோதி வந்து நின்ருள் இன்னொரு பெண் - புதுப் பெண் !

பஞ்சவர்ணம் வெறியைக் கலைக்காமல், நிமிர்ந்தாள் "யாரு இந்தப் புதுசு?...' வெறிக்க வெறிக்கப் பார்த்தாள்

"பஞ்சவர்ணம், நீ மெய்யாலுமே எந் தெய்வமாத் தான் தோணுறே. எங்கழுத்திலே மூணு முடிச்சுப் போட் டது போதாதின்னு, ஒங்கழுத்திலேயும் மூணு முடிச்சுப் போடறதுக்கு இந்தப்பாவி மனுசன் கூத்து ஆடின. கதையே எனக்கு இப்பத்தான் அக்கா காதுக்கு விழுந்து தலைதெறிக்க ஓடியாந்தேன்!” என்று கதறி ளு ஸ் அந்தப் பெண்.

"ஆ! என்ன இது? நீ யாரு ? நானு ஒங்கழுத்திலே மூணு முடிச்சுப் போட்ட்ேன? பஞ்சவர்ணம், இந்தச் சனியன் தாடகைக்குத் தங்கச்சி! இவரே நீ தம்பாதே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/162&oldid=612067" இலிருந்து மீள்விக்கப்பட்டது