பக்கம்:மருதாணி நகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 6 1

என்று விம்மியவாறு எழுந்தான் கோலப்பன். மறுகணம்,

அவன் நிலை சுழன்று தடுமாறித் தரையில் சாய்ந்தான்.

  • ஆத்தா!" என்று பெருங்குரல் எடுத்துக் கூவினுள் பஞ்சவர்ணம். முடிந்திருந்த தலை முடியை அவிழ்த்து விட்டாள். அவிழ்ந்து கிடந்த கச்சையை முடிந்து கொண் டாள். மருதாணிச் சிவப்பு அழியாமல் இருந்த அந்த மருதாணி நகத்தை வெறி பிடித்துக் கடித்துத் துப்பிளுள். உதிரம் சொட்டியது; சொட்டிய உதிரத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தாள். “மூத்தவளே ! .... நீயும் எம்மாதிரி ஒரு சமயம் ரத்தக் காட்டேறியா இருந்ததை ரூபிக்கவா இப்பிடி என்னை ஆட்டிப்படைச்சே?... ஐயையோ! இந்த ஊத்தைச்செம்மம் எனக்கு எப்பொறப்புக்கும் வேண்டவே வேண்டாம் ! கேவலம், நொண்டி முடமானவன் கூட என்ன்ைக் கொண்டுக்கிட வாய்க்காத கொடும்பாவியாகிப் புட்டேனே 1 ஐயையோ .... ஆத்தா !”

பஞ்சவர்ணம் பேய்ச்சிரிப்பை உதிர்த்துக் கொண்டே நடந்து வந்தாள். கோலப்பனையும் அந்தப் புதுப் பெண்ணையும் பரபரவென்று வெளியே இழுத்துத் தள்ளி விட்டு, மீண்டும் உள்ளே ஓடினுள். தி ரு ம் ப வு ம் திரும்பினுள். கோலப்ப்னையும் அந்தப் பெண்ணையும் காணவில்லை!... மறுபடி உள்ளே பாய்ந்தாள். நாதாங்கி யைப் போட்டாள். எரிந்த விளக்கை எடுத்தாள். சேலைத் தலைப்பைத் தீயில் நீட்டினுள். நெசம்ான் அன்பும் நேசமும் இல்லாத பொய்யான ஆளுகளுக்கு ஊடாலே, பொண்ணுப் பொறந்தவங்ானு வாழ்ந்துப்பிடலாம்னு நெனச்சதே குத்தமின்னு புரியறதுக்கு இம்மாங் காலமாயிருக்குது' -

அப்பொழுது : “ஜன்யயோ! பஞ்சவர்ணம்...நானு முத்தையன் இங்கனே மச்சுக்குள்ளே ஆ ப் புட் டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/163&oldid=612068" இலிருந்து மீள்விக்கப்பட்டது