பக்கம்:மருதாணி நகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மருதாணி நகம்

கிட்டுத் தவிக்கிறேனே! தீநாக்கு நாலு பக்கமும் சுட்டுப் பொசுக்குதே! ஒரு அசல் ஊர்ப் பொண்ணைக் கொண்டு கோலப்பனைப் பத்தி அ வ து று பேசி, பொய் சொல்ல வச்சுப்பிட்ட எம்பிட்டு நாக்கு இப்ப என்னையே சுட்டுப் பொசுக்குதே !...ஐயையோ, பஞ்ச வர்ணம்!... ஒன்னை ஒருத்தியையே மனசிலே நெனைச்சு நெனச்சுச் சந்தோசக் கூத்து ஆடிப் பழகிக்கிட்ட எனக்கு நீயே மாகை' ஆனே! ஆனதாலே, ஒன்னை இம்மியும் மறக்க ஏலலே என்னலே! அதொட்டி, முடிஞ்ச முடிவாய் ஒன்னை ஒரு வாட்டி பதம் பார்த்துப்புட வேணுமிங்கிற கெட்ட நோக்கத்தோடே கங்கணம் கட்டிக் கிட்டு வந்தேனே...நானு மாயாவி! ஈன செம்மக்காரன் நானு!... என்னைச் சோதிச்சுப் புடாதே எம்புட்டு தீவினை என்னைச் சுட்டுப் பொசுக்கி, கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பியிடும் போலயிருக்குதே ? ... ஐயையோ ... கண்ணுமண்னு புரியலையே! ... ஐயோ... தெய்வமே!... என்னைச் சமிச்சுப்புடு தாயே!...” என்ற அவலக் குரலை நெருப்புக் கணங்கள் செவிசாய்க்குமா?

விடிந்தது.

பஞ்சவர்ணம் தேநீர்க் கடை யின் முன்னே பெருங் கும்பல் கூடியிருந்தது.

நெருப்புக் கொப்பளங்கள் திகழ, முத்தையன் விசுப் பலகை ஒன்றில் கிடத்தப்பட்டிருந்தான். அவனுடைய விழிகள் இரண்டும் பையப் பைய திறக்க முயன்றன. "பஞ்சவர்ணம் ... பஞ்சவர்ணம் !...இந்தப்பாவிக்கு புத்தி சொல்லித் தாரதுக்கா இந்தக் குடிக்காட்டிலே வந்து பொறந்து, கடைசிலே நெருப்புக்குப் பலியானே ?... ஐயையோ!... ஒன்னை நானு இனிமெ எப்பொறப்புலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/164&oldid=612069" இலிருந்து மீள்விக்கப்பட்டது