பக்கம்:மருதாணி நகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 163

காணப்போறேன் ? ...” என்று அரற்றிஞன் முத்தையன் கிழவி சீரங்கம், தேம்பினுள். அந்த அயல் ஊர்ப்பெண் விம்மிஞள். கோவிந்தம்மா அழுதாள்.

மெய் நடுங்க எழுந்தான் கோலப்பன்.

"ஆயி பஞ்சவர்ணம் எனக்கு லவிச்ச புதுக்கோலத் தோட ஒங் கண்ணுப் புறத்தாலே முழிக்கிறத்துக்கு அஞ்சி, வெட்கப்பட்டு, வெந்து, நொந்து தலை மறைஞ்சு கிடந்த எனக்கு எம்மாம் பெரிய தண்டனை குடுத்துப் புட்டே நீ? கடோசிலே, என்ளுேட குலதெய்வமாவே மாறுறதுக்கா இத்தனைகாலமும் களுக்கண்டே நீ? ஆத்தா பஞ்சவர்ணம் அய்யோ ராக்காச்சி ஆத்தா!" என்று கிறுக்குக் .ெ க | ண டு, அ ல றி க் கொண்டிருந்தான் கோலப்பன். தரையில் தென்பட்ட அந்தக் கைப்பிடிக் கம்பை தத்தித் தத்தி எடுத்து, உக்கிரம் அணைந்திருந்த தீக்கும்பலில் ஓங்கி வீசினன். உடனே, அவன் வெறி மூண்டு விரைந்தான்; எழுந்தான்; நடந்தான் ஓட முயன்ருன் இடறி விழுந்தான். குச்சி உதவியது.

பாம்புப்புற்று அவ னு க்கு வெற்றிலே பாக்கு வைத்தது.

நல்லபாம்பு அவன் கைவிரலை எட்டிப்பிடிக்க வேளை’ கணித்துக் கொண்டிருந்தது.

" ஐயையோ, ம ச் சா ன் !... மச்சான்காரகளே! மச்சான்!...”

மூடிய கண்களைத் திறந்தான் கோலப்பன். "ஆ..."

“என்னைப் பழிவாங்கிறதுக்கு ரோசிச்ச ஆம்பளையை நானு பழி வாங்கிப்புட்டேன்...! இல்லே .. இல்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/165&oldid=612070" இலிருந்து மீள்விக்கப்பட்டது