பக்கம்:மருதாணி நகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 64 மருதாணி நகம்

ஆத்தா பழிவாங்கிப்புட்டா... ...பாவம்'... ஆமா, ஆமா!... பாவம் செய்ய வந்த அந்த முத்தையன் மச்சான் பாவத் தைச் சுமந்துக்கினு போயிட்டாரு ம்... அந்த ஆசாமி யோட கதை இப்பிடி அவலமா முடிஞ்சதுங்கிற கதைகூட ஊருக்கு இனிமேத்தான் புரியும் .அவுக விதி அப்பிடி. தலைச்சுழி அப்பிடி சரி, இனியும் நாம இந்தப் பாவ மண் ணிலே கால்பாவி நிக்கிறது பாவமுங்க...ம், தெய்வம் நின்னு கொல்லுமினு சொல்ற மூத்தவுக வாக்கு மெய்ப் பட்டுப் பூடுச்சு!... ஊம்... மச்சான் உங்களுக்காவத்தான் ஆவணத்தாங் கோட்டை மண்ணைவிட்டு இங்கிட்டாலே காத்துக்கிட்டு இருக்கிறேனுங்க என்னைப் பெரிய மனசு பண்ணிப் பொறுத்துக்கிட மாட்டீகளா?... ராவு அந்த முத்தையன் மச்சான் நான் மூட்டின நெருப்பிலேயே அகப்பட்டுக்கிட்டப்ப, அந்த மனுசன் தான் செஞ்ச குத்தத்தை ஒப்புக்கிட்டுக் கத்தினதை நானு கேட்கப் போவத்தான், ஒங் க ேள | ட மெய்யான நெலைமை எனக்குப் புரிஞ்சிது. நானும் உயிர் தப்பிச்சேன்... இதுகூட ஆத்தாளோட புண்ணியந்தான்!... மச்சான். மச்சான்!...” என்று தேம்பி நின்ற பஞ்சவர்ண்ம், அவனது கன்னத் தழும்பில் தன்னுடைய பரிசுத்த மான கண்ணிர்க் காணிக்கையை தாரை வார்த்தாள். புதுப்பிறவி கொண்டாள். அவன் சிரிப்பில், அவள் சிரித்தாள்.

கோலப்பன் கோல் நகைபுரியக் கேட்பானேன்!

கடலைக் கொடிப்பூவைப்போல செஞ்சுடர்ச் செல்வன் மின்னினன். அந்த மினுமினுப்பால், அவளது முகம் துலாம்பரமான எழிற்கோலம் ஏந்தியது. கோலப்பன் அவளைப் பயத்துடன் அண்டிஞன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/166&oldid=612071" இலிருந்து மீள்விக்கப்பட்டது