பக்கம்:மருதாணி நகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 3 மருதாணி நகம்

‘ராஜாமுடி வெள்ளிப் பணங்களில் இரண்டை எடுத் தாள். "இந்தா, இதை, வச்சுக்கிடு. ஒரு ருவாக் காசு இருக்கு. கூப்பிடுற தொலையிலே ராக்காச்சி ஆத்தா கோயிலு இருக்கு. அங்கனே பசியாறிக்கிடு. ஒடு,” என்று துரிதப்படுத்தினுள்.

வந்தவன்கதை பழங்கதையாக இருந்த வேளை பார்த்து, அவள் அவனை மறுதரம் அலட்டினுள். 'இந்தா, ஒன்னைத்தான். ஒம் பேரு என்னு?’ என்று விளுச் சொடுக்கினுள்.

'கோலப்பன் ” என்ற பதில் புற ப்ப ட் டு வ ந் து சேர்ந்தது.

"சரி நீ போவலாம். என்னு, தயங்கிறே? எம் பேரு ஒனக்குத் தேவைப்படாது.நடையைக்கட்டு. இந்தா, நில்லு. இதைமட்டுக்கும் காதிலே வாங்கிக்கிடு. எப்ப பசிக்குதோ அப்ப இங்காலே வா. ராத்திரி, பகல் எப்பவா லுைம் வா. பகலுக்கு வந்தீன்ன, திரமாக் கிடைக்கும் திங்கிறதுக்கு. சாயாக்கடை லாவாரம் எனக்கு அம்புட் டுத்தான். நீ போய்க்க!”

அவள் விடை’ கொடுத்தாள்.

அவன் போகத் தொடங்கினன்.

அடுத்ததாக அவளை அடுத்து வந்தது இன்னுெரு சந்தேகம்.

"இந்தாப்பாரு!”

அவன் அவளை உன்னிப்பாய்ப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/20&oldid=611925" இலிருந்து மீள்விக்கப்பட்டது