பக்கம்:மருதாணி நகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மருதாணி நகம்

அவளது நையாண்டிப் பேச்சில் அவன் உள்ளம் மறுகினன்; உடல் குலுங்கினன். அவளே விழுங்கி விடுபவனென விழி அழுத்திப் பார்த்தான்.

"இன்னுங்கிறேன்...மொறை மச்சான் பாக்கிருப்லே மறுகடுத்தமும் அம்மாந்துாரம் பாக்கிறே?..... சும்மா கிளம்புங்கிறேன்!” என்று உத்திரவிட்டாள் பஞ்ச வர்ணம்.

கோலப்பன் போய்விட்டான்.

மிளகாய்ப் பா னை யை இறக்கினுள் தம்பிக் கோட்டைச் சூரிக் கத்தி ஒன்று வந்தது. அதைத் தன் இடுப்பில் சொருகிக்கொண்டாள். குடிசையின் தெருப் புறப்படல் கதவை வழி அடைத்தபின், அவள் மார்பகத் துணியை இழுத்து விட்டவளாக, நடை பயின்ருள். கைவளைகள் குலுங்கின; தண்டை கொஞ்சியது; மிஞ்சி பண் இசைத்தது. விழி பதித்து, வழி மடங்கி, தடம் பார்த்து, தடம் மறுகி நடந்தாள் அவள். நெருஞ்சி முட்களை அருட்டினுள் அவள். ஐயனர் கம்மாயை ஒதுக் கிளுள். நிலவை ஒதுக்குவாளா?

ராக்காச்சி அம்மன் கோயில் வந்தது!

ஊராளும் தேவதை ராக்காச்சி!

சித்திரா பெளர்ணமித் திருநாள் அன்றைக்குத் தான் காப்புக் கட்டுத் திருவிழா ஆரம்பம்.

பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒருபுறம் நடந்தது. கரகம் விளையாட்டு மறு தெ ங்கலில் அத்தளிப்பட்டது. சிலம்பக்கழிகள் மோதி விலகி நிர்த்துளிப்படுத்தியவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/22&oldid=611927" இலிருந்து மீள்விக்கப்பட்டது