பக்கம்:மருதாணி நகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 2?

றிருந்தன. கன்னி கழிந்த பெண்கள் தாலிகள் குலுங்க ஓர் ஓரமாக நின்று கும்மி கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

இன்பத்தின் எல்லைப் புள்ளியில் பக்தி கணிகிறது!

பக்தியின் தொடுசரத்தில் இன்பம் தொடுக்கப் படுகிறது.

உலகாளும் அம்பிகை, மறக் கருணையின் முத்திரை யில் அறக் கருணையின் அபயம் பதித்து விளங்கிளுள். தஞ்சமென வந்தவர்கட்கு, அஞ்சேல் என்று சொல்லிக் காட்ட தெய்வமணிக் கரங்கள் இரண்டும், போதாதா? எஞ்சிய இரு கைகளில் திரிசூலமும், பலிகொண்ட அசுரன் தலையும் வடிவுகாட்டின. அவள் வடிவழகி திரி லோக சுந்தரி அவள்! பாவ நாசினி ஆயிற்றே?

ஐயனர் குதிரையும் சன்னசித் தெய்வமும் காவல் நிற்க, ராக்காச்சித் தாய் நின்ருள்.

வந்த பஞ்சவர்ணம் தேட்டம் கணித்து ஓர் ஒரமாக நின்ருள். கை தொழுதாள். ஆயி இந்த ஏழைப் பொண்ணைக் காப்பாத்து. இந்தக் கடுத்தம் தேரோட்டத் தன்னைக்கு ஒனக்குப் பள்ளயம் படைக்கிற வளமைப்படி மேலைக்கும் செஞ்சுப்பிடுகிறேன்!” -

சிவப்புப் பொட்டிட்டு, திருநூறு பூசி முடித்ததும், பூசாரி நீட்டிய பூச்சரத்தை உச்சித் தலையில் செருகிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டாள்.

"ஏலே...பஞ்சவர்ணம்' அவள் திசை திரும்பினள். வாலே. தெவ்வி!" "இந்தாப்பாரு நம்ப காத்தாயி

12,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/23&oldid=611928" இலிருந்து மீள்விக்கப்பட்டது