பக்கம்:மருதாணி நகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 25

நிலவின் பொலிவில் கழிகள் சுழித்தன.

வளைக்கரத்தில் சத்தம் வழிந்தது.

"இளஞ்சிங்கங்கள் அறுவரும் கடலே கதி’ என்று பரிந்து விட்டனர்.

“ւնք,

கண்ணிர் வழிந்து செந்நிறம் பாய்ந்து ஓடிக் கொண்டே யிருந்தது.

| ro

கோலப்பன் நினைவு தப்பியவனுக, பஞ்சவர்ணத்தின் மடியில் கிடந்தான்.

“தங்கச்சி தெவ்வி, ஒடிப்போயி மணியக்கார எசமா னருகிட்டே காதைக் கடிச்சு, நடந்த அநியாயத்தை விழுக்காட்டி, கையோட அவங்களை இட்டுக்கிட்டுவா எங் குடிசைக்கு அதுக்குள்ளே, பக்கத்தாலே மொட்டை வண்டி பிடிச்சு, இந்த ஆம்பளையை என் நிழலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, வைத்தியம். வாகடத்துக்கு வகை செய்யிறேன்!” என்ருள் பஞ்சவர்ணம். நா தழு தழுத்தது. நெஞ்சு எம்பி எம்பித் தண்ணிந்தது. அவளது தோளில் கிடந்தது கோலப்பனின் வலது கை. அவனுடைய மேனியைத் தொட்டுத் தடவிக்கொண் டிருந்தாள். அப்பால், அவனது விழி நீரைத் துடைத் தெடுத்தாள்.

ஆளுல் தன் கண்ணிரைத் துடைக்க மட்டும் அவளுக்குப் பாதை புரியவில்லையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/27&oldid=611932" இலிருந்து மீள்விக்கப்பட்டது