பக்கம்:மருதாணி நகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இச்சை !

நாவித அம்மையப்பனின் சாம்பல் மேட்டுச் சேவல் கூவவில்லையென்ருல், பொழுது விடியாது ஆமாம், விடியவே விடியாது!

பஞ்சவர்ணம் கண் விழித்தபோது, அசதி கண் உறங்கியிருந்தாற்போல ஒர் உணர்வு பரவி யிருந்தது. இனம் பகுத்துத் தெளிவு கண்டு கொள்ள முடியாத உள்ளக்களிப்பு ஊறிக்கொண்டிருந்ததையும் அவள் தெள்ளத் தெளியக் கண்டறிந்தாள். இன்பக் கனவொன் றைக் கண்டு துயில் கலைபவளைப் போன்ற நிலையில் இருந்த அவள், சடுதிக்குள், மனம் பேதலித்தாள். முல்லை மென் விரல்கள் அவளுடைய தாமரைக் கன்னங் களை அணைந்து, பிறகு அவை அந்தக் கோல விழிகள் இரண்டையும் விலக்கியபோது, மன அமைதியும் விலகி விட்டதாகவே அவளுக்குப் பட்டது. பட்ட மரக்கிளையாய் அவளது ஆசைக்கனவு நொறுங்கி விழுந்துவிட்ட மாதிரி அவள் தவியாய்த் தவித்தாள்.

கொதித்த நெஞ்சத்தின் தவிப்பு விழிவளையக் கரை களில்,கொதிநீரைக்கொண்டுவந்தது. கண்ணிரில் மனச்

அ சட்ட அனுபவம் ஏற்படவில்லை. ஒன்றை நினைக்

ன்று ஒன்பதாகக் கிளை வெடித்தது. முருங்

s ளையில் ஒன்பது கணுக்கள் முளைக் களைத் துடைத்துக்கொண்டாள் ஆளுல் சுடுநீரைத் துடைத்துக்கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/28&oldid=611933" இலிருந்து மீள்விக்கப்பட்டது