பக்கம்:மருதாணி நகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி ககம் 27

சுற்றிச் சூழ நோக்கிள்ை. ஆலயத்தைச் சூழ்ந்திருக்கும் புனித மயமான அமைதியை அங்கே கண்டாள். ஆனல் அவள் தெய்வத்தைக் காணவில்லை.

தென்பாரிசமாகப் பக்கவாட்டில் தலையைத் திருப்பி விட்டாள் பஞ்சவர்ணம்.

வசமிழந்த வடிவத்தில், அலுங்காமல் நலுங்காமல் படுத்துக்கிடந்தான் கோலப்பன் மல்லார்ந்து கிடந்தான். நெற்றிமேட்டின் தலைப்பில் கட்டுப்போடப்பட்டிருந்தது. சல்லாத் துணியின் வெளிப்புறப் பரப்பில் மஞ்சளும் ஆடாதுடைச்சாரும் கலந்து உருவான மஞ்சட் பச்சை நிறம் பரவியிருந்தது. முடிச்சுக் கிழிசல்களின் பிணைப்பு முனையில் கெட்ட நீர் ஒட்டிப்படலாய்க் கனத்திருந்தது. தாழிடப்பட்டிருந்தன. இமைக்கதவுகள். இதழ்பிரிக்கப் படாத போக்குடன், அரும்புகட்டிக் காணப்பட்டது மீசை, சவடால் இல்லாத வெள்ளே மனசு அவனுடையது என் பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது முக விலாசம் உதயத்தின் முதற் சுடர் சிந்திச் சிதறி வந்து அவன் மேனியில் அணைந்தது.

திருப்பதி மரப்பாச்சியை கண்கொட்டாமல் பார்த் துக்கொண்டேயிருக்கும் பாலகிக்கு அடுத்தபடியாக ஆளுள் அவள். கோலப்பனின் கோல முகத்தை அழுத் தம் பதித்துப் பார்த்தாள் பஞ்சவர்ணம். பாவம், தன் நெனைப்பு அத்துப்போய் கடுந் தூக்கமாத் தூங்குது இந்த ஆம்பளை. இது யாரு, எந்த ஊரு ஏதுக்காக அந்தப் படுசுட்டிப் பயலுககிட்டப் போய் ஆப்புட்டது, ஏன் இதை அந்தத் தறுதலங்க நையப்புடைச்சானுக... இங்கிற சங்கதிக்கெல்லாம் ஒரு தாக்கலும் மட்டுப்பட லையே? ராவு மணியக்கார ஐயா வந்து கேட்டகேள்விங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/29&oldid=611934" இலிருந்து மீள்விக்கப்பட்டது