பக்கம்:மருதாணி நகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மருதாணி நகம்

களுக்கு பொண்ணுப் பொறந்த என்னலே ஒப்புக்குக்கூட ஒரு தகவலும் தர ஏலலையே! அல்லாம் சீலைத் தலைப் பிலே முடிஞ்ச தாட்டம் கமுக்கமாயிருக்குதே ?...

கன்றின் குரல் கனிந்து வந்தது. பருவம் தப்பிக்காய்த்த ஊசி மிளகாயைக் கடித்த மாதிரி அவள் சுள்ளாப்புடன் எழுந்தாள்.

அடுத்த காலேவீசம் நாழிகையில் அவள் நல்ல

மூச்சுப் பறித்தாள் : வாசல் முகப்புப் படலைத் திறந்து வைத்தாள் பஞ்சவர்ணம்.

அது சில்லுப்போன தகரம் துரு ஏகமாய் மண்டி யிருந்தது. பழசு. "பஞ்சவர்ணம் டீ கடை” என்னும் எழுத்துக்கள், ஆவணம் கதீஜா பாட்டியின் தயவால் கிடைத்த சுண்ணும்பினுல் தீற்றப்பட்டிருந்தன.

புலரிப் பொழுது.

இதோ, தேத்தண்ணிர்க்கடை ஆரம்பமாகிவிட்டது.

இனிமேல், பஞ்சவர்ணத்தை யாராலும் பிடிக்கமுடி யாது. ஏனென் ருல், அவள் யார் பிடிக்கும் அகப்பட மாட்டாள். வியாபார நேரம் தொடங்கி விட்டதென்ருல், அவளுக்குக் காரியத்தில்தான் கண். கண்களில் தீட்சண் யமும், கருத்தில் கவனமும் இருக்கும். லாவாரம்னு எனக்கு லாவாரம்தான். அப்பாலேதான் சொந்தம் சோவாரி அது இதுவெல்லாம். கையிலே மடியிலே நாலு காசு புழங்கிளுத்தானே நாளைப்பின்னைக்கு என்னை யும் பொண்ணுத் தோணும் எஞ்சாதி சனங்களுக்கு! இல்லாப்போன செத்த பொணத்துக்குக் கொடுக்கிற மரு வாதையைக்கூட, இந்தப்பட்டிக்காட்டிலே தர ஒப்பமாட் ifræGsmr?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/30&oldid=611935" இலிருந்து மீள்விக்கப்பட்டது