பக்கம்:மருதாணி நகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 29

அவிந்த இட்டலித் தட்டுகளை ஆறு ஈடு எடுத்து, நனைந்த துணிக்கிழிசலில் கொட்டினுள் அவள்; சின்னுத்தா சிறுமி. வயசு ஒன்பதுக்குமேல் தள்ளாது. சுட்டிப் பெண். அவளுக்கு எடுபிடி. சின்னுத்தா அகப் பையை அரிசி மாச்சட்டியில் இட்டு எடுத்து இட்டிலித் தட்டின் குழிகளில் ஊற்றிக்கொண்டிருந்தாள். பஞ்ச வர்ணம் கேத்தலில் நெருப்பைத் தள்ளிவிட்டு ஊதினுள். கண்கள் எரிந்தன; நெருப்பும் எரிந்தது. தலையை விசை யுடன் திருப்பினுள். "ஏடி, இன்னம் கொஞ்சம் தெரமாத் தான் ஊத்தேன். கையிலே தேளே வச்சுக்கிட்டிருக்கிற மாதிரிஏன் பயந்து சாகிறே? நான் எம்பிட்டு வாட்டி ஒனக்குப்படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்கேன்,ஊராருங்க சல்லிக்காசுகூட நம்மளுக்கு வாணும்னு அண்டை அசல வங்கபணம் அனுமத்தா வருதின்னுக்க, ரொம்ப ரொம்ப எக்காளந்தான் வரும் ஆன பின்னடி, நெய்யா தின்ன துக்கு ரத்தமா வாயாலே எடுத்தாக வேணுமிங்கிற லவிதப் பேச்சை யாரு இந்தக் கலி காலத்திலே ரோசிக்கி ருக? ஊம் என்று ஒரு மூச்சுப் பேசித் தீர்த்தாள்.

சின்னயிக்குப் பயம் உண்டாயிற்று. ஒன்பது குழி களிலும் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் மாவை ஊற்றிள்ை. அதன் மூலம், தனக்கு நேரவிருந்த பாவத்திலிருந்து மீண்டு, தன் அக்காவுக்குப் புண்ணியம் சேர்த்துக் கொடுத்ததாக ஓர் ஆறுதல் படர்ந்தது.

பஞ்சவர்ணம் சிரிப்பதில் எப்போதுமே கஞ்சத்தனம் காட்ட இசையாதவள். பொம்பளை சிரிச்சாப் போச்சு; போயிலை விரிச்சாப் போச்சின்னு சும்மாச்சுக்கின்னலும் யர்ரோ துப்புக்கெட்டுச் சொல்லி வச்சாக்க, அதுக்காக, சிரிக்கப்புடாதா? ப்யூ...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/31&oldid=611936" இலிருந்து மீள்விக்கப்பட்டது