பக்கம்:மருதாணி நகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மருதாணி நகம்

ஆதித்த பகவானின் இளங் கிரணங்கள் முதுமை கொண்ட பாங்கில் சூடேறியபடி, கடையின் உட்பக்கக் கூடத்தில் தவழ்ந்தன.

"தங்கச்சியோ!”

t” -

“யாரு? டேடே! வா, தாத்தா

"சொகமா, பேத்தி?”

'சொகத்துக்கு என்னு கொறைச்சல்? பெத்த அப்பன், ஆத்தா மூஞ்சியைக் காணுறதுக்குப் பொசுப் பத்த கட்டையாகிப் பிட்டாலும், ஒங்கமாதிரி முடி வெளுத்தவங்க புண்ணியத்தாலே நல்லாத்தானுங்க இருக்கேன்.”

"ம்...சரி; தாகத்துக்குக் குடுப்பீயா?”

"தாரேன், தாத்தா. பசியாறலையா?”

"பொழுது இல்லே. கம்மங்காட்டான் தாக்கிலே இன்னைக்கு நடவு. கோடை வெள்ளாமையிலே ரவை யுண்டு குந்தகம் வந்தாலும், நாம தரையிலே குந்திப்புட வேணும். அதாலேதான், சுடு தண்ணியை வாய்க்கு உணக்கையா ஊத்திக்கிட்டுப் பொடி நடையாப் பறிஞ்சா, அப்பாலே திரும்பு காலிலே இட்டலி தோசை தின் னிட்டாப் போவுது," என்ருர் கிழவர்.

வெந்நீர்க் கேத்தலில் பதம் பார்க்க, இடதுகை ஆள்காட்டி விரலை வைத்துப் பார்த்தாள் அவள். பிறகு, குறிஞ்சிப்பாடிக் குவளையில் வெந்நீரைப் பிடித்தாள்: தட்டுக் கரண்டியில் தேயிலைத் தூளைக் கொட்டினள். கண் முடிக் கண் திறந்தாள். "தாத்தா, இந்தா குடி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/32&oldid=611937" இலிருந்து மீள்விக்கப்பட்டது