பக்கம்:மருதாணி நகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 31

பாட்டன் கை தங்கக் கை. ஆல்ை வெள்ளிப் பணத்தைத்தான் நீட்டினர். சில்லறை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினர்.

'அக்கா,” என்று பிஞ்சுக் குரலொன்று அவளைத் தோள் தட்டிக் கூப்பிட்டது. திரும்பினுள். நின்ற சிறுமியைக் கண்டதும், காணுததைக் கண்டது போல அவ்வளவு மகிழ்ச்சியும், காணவேண்டியதையே கண்டு விட்டதில் அத்துணை ஆறுதலும் பெற்ருள். "குணவதி தங்கச்சியா? மணியக்கார ஐயா ஏந்திருச்சுப்புட்டாங் களா?” என்று வினவினுள்.

“ ஆமா, அக்கா. வழக்கம்போல வெள்ளனவேதான் அப்பாரு ஏந்திருச்சிட்டாங்க. வளமையாக்குடுக்கிற அஞ்சு இட்டிலி இன்னைக்குக் காணுது, யாரோ நாலு மூணு ஆளுங்க விருந்தாடிக வந்திருக்காங்க. அதாலே கொஞ்சம் கூடுதலாத்தான் பலகாரம் வேணும்.”

{ { எம்புட்டு ფ»

'ரெண்டு கைவீச்சுக்கு தாங்க அக்கா !” என்று பதில் கொடுத்தாள் மணியக்காரரின் மகள். மூச்சின் இழையைத் தொடர்ந்து, "இப்பத்தான் நெனப்பு வருது. ஆமா, நேத்திக்கு ராவு ஆத்தாளுக்குக் காப்புக் கட்டுறது நடந்து முடிஞ்சடியும், என்னமோ வம்பு தும்பு நடந்திச் சாம். ஒங்க பேருகூட அடிபட்டிச்சுதே? என்ன அக்கா, சங்கதி?” என்று பையக் கேட்டாள்.

பஞ்சவர்ணம் இந்த சில நாழிகைப் பொழுதாக ஏதோ ஒன்றை மறந்திருந்த செயல் அவளுக்குப் புலப் பட்டது. ஒங்க பேருகூட அடிபட்டிச்சுதே? என்று குணவதி சொன்ன பேச்சை விரித்துப் பிரிக்க நாட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/33&oldid=611938" இலிருந்து மீள்விக்கப்பட்டது