பக்கம்:மருதாணி நகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மருதாணி நகம்

கொள்ளவில்லை அவளது பெண் மனம். பாவம், ஊருக்குப் புதுசா வந்த ஒரு இளசை அடாபுடியா நாலு ஆறு பேருங்க சுத்தி வளைச்சுக்கிட்டு அடிச்சுப் போட முனைஞ்சாக்கா, இந்தப் பஞ்சவர்ணம் குட்டி கையைக் கட்டிக்கிட்டு 'தன்னுனே கொட்டு முழக்கத்தை வேடிக்கை பார் த் து க் கி ட் ட நிப்பா? இல்லே கேக்கிறேன்!...”

உண்டான பணத்தை நீட்டிச் சென்ருள் சின்னப் பெண்.

உண்டாகிவிட்டிருந்த கிலேசத்தை மாற்றி மறைக்க வேண்டி, சந்துவிடிடியை வரவழைத்துக் .ெ கா. ஸ் ள வேண்டியவள் ஆளுள் பெரிய பெண். வியாபாரத்தை நோட்டம் பார்த்த கணக்கிலேயே நேர்வசமாக பார்வையைச் செலுத்தினுள். செலுத்தப்பட்ட காசு பணத்திற்கு மிச்சம் மீதியை எண்ணிக் கொடுத்த வாறே, அவள் உள்ளே பார்த்தாள். பொளுது நெடுக ஓடுது. இன்னமா மூக்குடி ஆளு அசதி தெளிஞ்சு கண்ணைத் தொறக்கலை?...ஐய, பாவம்! அனுதாபக் குறிப்பு ஓடியது, காதளவோடிய கெண்டை விழிகளிலே மூக்குடியான் தோன்றின்ை, பார்த்த முகத்தைப் பார்த்தாள். தெரிந்த முகம் தெரிந்தது. நயனமடல் களிலே ஊர்ந்த இளநகை, உதட்டுக் கங்கில் தீக்கங் காகச் சிவந்தது. ரோஜா இதழ்களைத் தாங்குவதால், காம்பும் இலத்துணுக்கும் பெருமைப்படுவது சகஜம். அவள் முகமும் அப்படிப் பெருமைப்பட்டது, அப்படி மகிழ்ந்தது. அவள் பட்டிக்காட்டு ரோஜப்பூ!...

காக்கை உட்காரக் கண்டால், பொட்டைச் செம்மறி உடம்பைச் சிலுப்பிக் கொள்ளாதா? அவளும் அப்படியே இயங்கிளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/34&oldid=611939" இலிருந்து மீள்விக்கப்பட்டது