பக்கம்:மருதாணி நகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 33

'பஞ்சு!" என்று ஒரு குரல் கேட்டது.

அவள் தலையை உயர்த்தினுள். 'அட, நெருப்பா? வா, அண்ணுச்சி!” என்ருள்.

வந்தவன் எகத்தாளமாகப் புகை பிடித்துக் கொண்டே படிக்கட்டில் ஏறிஞன். சுருட்டின் தொங்கலி லிருந்த நெருப்பில் புகை புறப்பட்டது.

பஞ்சவர்ணம் நாசியைப் பொத்திக் கொண்டாள். “ஒங்களைத்தான்...இங்கிட்டாலே சத்த பா ரு ங் க,” என்ருள். 'புகை பிடிக்கக்கூடாது!” என்று சாணித்தாள் கிழிசல் ஒன்று எச்சரிக்கையைச் சுமந்துகொண்டு, வாயு பகவானை தனது பண்ணிச் சமாளிக்கவேண்டிய இக்கட் டில் தத்தளித்தது.

'நெருப்புக்குப் படிப்பு கோழி முட்டை. பேந்தப் பேந்த விழித்தான்.

அவளுக்குத் தடம் புரிந்தது. ஆகவே மெல்ல நடந்து, அந்த மனிதனின் வாயிலிருந்த சுருட்டைப் பிடித்து எடுத் துத் தூர வீசி எறிந்தாள். எரிந்த தீயுடன் வாசல் ஈரம் உறவு பூண்டது. நம்ம நாடு கொத்தடிமை நீங்கிப்பிடும், விடிமோச்சம் வந்துப்புடும்னு நம்ப பூவத்தக்குடி காங்கிரசு செட்டியாரு சதா கூட்ட நாட்டம் போட்டு பேசிக்கிட்டு வாராங்க. அவுங்க பேச்சுப்போல, அது வந்தாலும், இது ஒத்த ஆளுங்களுக்காச்சும் கண்ணு முழிப்பு வரும் ...'

கர்ப்ப ஓட்டத்தில் ஐந்தாறு துாற்றல் விழுவதுபோல, அவள் மனக்கொம்பிலிருந்து தொடர்பு இற்ற போக் குடன் இல்லாத பொல்லாத நினைவுகள் உதிர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/35&oldid=611940" இலிருந்து மீள்விக்கப்பட்டது