பக்கம்:மருதாணி நகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. மருதாணி நகம்

காலம் ஊர்ந்தது.

அவள் ஊறவில்லை.

உருமப்பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. வேறு யாராவது அவளைத் தொட்டுக் கிள்ளியிருந்தால், லேசில் விடுவாளா?-ஊஹாடும், அந்தச் சம்பம்தான் அவளிடம் சாயாது. பசி வயிற்றைத் தொட்டுக் காட்டிய தால் அவள் சும்மா இருந்தாள். அவளுள் ஏற்பட்ட அந்தப் பசியின் உணர்வு, வேருெரு பசியின் வரலாற்றை அவளுக்கு ஞாபகப்படுத்தியது. விசுக்கென்று கல்லாப் பெட்டியை மூடினுள் உள்ளே பாய்ந்து சென்ருள். கோலப்பன் துயில் கள்ளியின் மடியில் தலைவைத்தவாறு தான் இன்னமும் இருந்தான். கும்பகர்ணித் தூக்கமோ,

என்னவோ?

பஞ்சவர்ணம் அடி தளர்ந்து நடந்து சென்ருள் கோலப்பன் படுத்திருந்த குறுந்திண்ணையை நெருங்கி ள்ை. முழந்தாளிட்டு அமர்ந்தாள். தளர்ந்திருந்த ரவிக்கை முடிச்சை இரு கைப்பெரு விரல்களும் முடிச்சுப் போட்டன. சேலை முந்தானையைக் கொய்து, வேர்வை நெற்றியைத் துடைத்தாள். கன்யாகுறிச்சி அழகு மஞ்சள் என்ருல், கெட்டிச் சரக்கு; மஞ்சளின் புள்ளிகள் மயில்க்கண் புடவையில் ஒட்டியிருந்தன.

அண்ணுந்த பார்வை தப்பாமலேயே இன்னமும் அவன் கிடந்தான்.

"இம்...இந்தாப் பாருங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/36&oldid=611941" இலிருந்து மீள்விக்கப்பட்டது