பக்கம்:மருதாணி நகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 35

அவள் கைகளைக் கொட்டினுள். அவன் எழும்பினுல்தானே?

“ஊஸ்...!" என்று சீழ்க்கை ஒலி கொடுத்தாள்.

அவன் உ ட ம் பி ல் கடுகத்தனை சலனமாவது உண்டாக வேண்டுமே!

கடைசியில், ஏதோ ஒன்றை எண்ணி, எண்ணிய எ ண் ண த் ைத வலுப்படுத்தியவளாக, தன் இரு கரங்களையும் பதனமாகத் தொட்டு அவனை எழுப்பினுள்.

'சூ, மந்திரக்காளி' போட்டு, மூன்றே முக்கால் நாழிகை வசம் தப்பிக் கிடந்து, பின், கெடு முடிந்து துயில் நீங்குபவனைப்போல, கோலப்பன் எழுந்தான். கண்களைக் கசக்கிக்கொண்டு, விழி த்து விழித்துப் பார்த்தான். சுற்று முற்றும் பார்த்தான். அப்புறந்தான், அவன் பஞ்சவர்ணத்தை ஏறிட்டு நோக்கலாஞன்.

"நான் இங்கனே எப்பிடி வந்தேன்?" என்று பெரிய கேள்வி ஒன்றைச் சிறிய கண்டத் தொனியில் சொடுக்கி விட்டான் அவன்.

அவளுக்குச் சிரிப்புப் பாதியும் சள்ளை பாதியும் ஏற்பட்டது.

அவளுடைய இரண்டுங்கெட்ட மெளன நிலையில் அவனது தவிப்பு வளர்ந்தது. தவிப்பில் நடந்த கதையின் முன்கதைச் சுருக்கமும் சிறுகச் சிறுக நடைபழகத் தொடங்கியது. "என்னை அடிச்சுப் போட்டுப்புட்டு மறுகி ஓடின. அந்தப் பயலுக யாரு தெரியுமா ஒன.க்.கு?" என்று சினம் மூள வினவின்ை அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/37&oldid=611942" இலிருந்து மீள்விக்கப்பட்டது