பக்கம்:மருதாணி நகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மருதாணி நகம்

"அ தெ ல் லா ம் மறுகாப் பார்த்துக்கிடுவோம். இப்பைக்கு எதையும் மண்டையிலே கொண்டுக்கிடாதீங்க. வாய் கொப்பளிச்சுப்பிட்டுக் குந்துங்க. ரெண்டு இட்டிலி புட்டுப் போட்டுக்கிட்டு, ஒரு லோட்டா சாயாத் தண்ணி ஊத்திக்கிடுங்க. இந்தாப் பாருங்க, இப்ப நான் செப்றதைக் காதிலே வாங்கிக்கிடுங்க, ஒங்க பகையாளி இனிமேலே எனக்கும் சென்ம விரோதிதான். இது ஆத்தா பேரிலே வச்ச ஆணையாட்டந்தான். என்னைப் பத்தி மனசுக்குள்ளாற நானே ஒசத்தியா நெனேச்சுக் கிட்டு, பதில் வெட்டாட்டம் நடக்கச் சம்மதிக்காதவ நான். ஒண்ணு சொல்றேனுங்க. நான் அன்புக்குத் தொண்டுழியம் செய்வேன். ஆணு அதிகாரம் படிச்சாக்க, அது யாராயிருந்தாலும் சரி, அவுகளுக்கு நானே அதிகாரி ஆகிப்புடுவேன். மனசை அலட்டிக்கிடாம இருங்க சுண்ணும்பு கிள்ளிப் போடறதுக்குள்ளே

சுருக்கண ஒடியாரேன்,” என்று கூறிச்சென்ருள்.

கோலப்பனுக்கு களிப்பூறல். எரு பூசிய கட்டாந் தரையில் சிதறியிருந்த கோழி இறகுகளை எட்டி எடுத்தான். மூலிகைச் செடியின் முட்கள் சில அவன் பார்வையில் தைத்தன.

பஞ்சவர்ணம் மிஞ்சி ஓசை காட்ட வந்தாள். இட்டிலி, துவையல், எண்ணெய் சகிதம் வந்தாள். “மூஞ்சி கழுவலே?. ம் மூசு முசுன்னு அல்லாத்தையும் செஞ்சு முடியுங்க!" என்று துரிதப்படுத்தினுள்.

அவன் முகம் கழுவிக்கொண்டு வந்தான். அவள் ஏந்தி நின்ற திருநீற்றைத் தொட்டு நெற்றியில் பூசினன். காலைப் பலகாரம் உச்சிப் பொழுதில் நடந் தேறியது, ஏப்பம் பறிந்தது. கையிலிருந்த இறகுகளைக் காட்டி சாடை பேசினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/38&oldid=611943" இலிருந்து மீள்விக்கப்பட்டது