பக்கம்:மருதாணி நகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 37

ராத்திரி ஒங்களுக்குக் கோழிச் சூப்பி வச்சுக் குடுத்தேன். கண்டங் கத்தறி வேர் சொரசம் செஞ்சு தந்தேன். ம்...!" என்று பெருமூச்செறிந்தாள் அவள்.

அவனுக்குக் கண்ணிர் வந்துவிட்டது. அவன் நிலையை இனம் கண்ட அவள் நலியாமல் தலையை வேறுபுறம் திருப்பினுள். அப்போது, ‘ஊஷ்.. ஊஷ்!" என்று சீட்டிச்சத்தம் தட்டியைப் பிய்த்துக்கொண்டு ஓடி வந்தது. கும்மி கொட்டும்போது பாதங்களை மாற்றி வைப்பதுபோலச் செய்தபடி, எதிர்ப்புறம் நோக்கினுள் அவள். மேனி துடித்தது; ரத்தம் சூடேறியது; தாழ்வா ரத்தின் வரிசைக் கம்பு ஒன்றை உருவினுள் கையில் அதனைத் தாங்கியவளாக, வெளியே வந்தாள். நிமிர்ந்து நின்ருள். அசல் தமிழச்சி போலவே தோன்றினுள். இளமையின் கவர்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

முன்தினம் திருநாள் மைதானத்தில் கோலப்பனை வளைத்து மடக்கிக்கொண்டு நையப்புடைத்த எதிரிகள், கடைக்குக் கீழ்ப்பக்கம் பிரிந்த ஒற்றையடிப்பாதை மருங் கில் கொன்றைக் கன்றுக்கடியில் வாட்டசாட்டமாகச் சுற்றி நின்ருர்கள். சொல்லிவைத்த கதையாக, அவர்கள் அவ்வளவு பேர்களும் அவளை விழுங்கி விட்டுத்தான் மறுகாரியம் பார்க்கும் அர்த்தத்துடன் காட்சி தந்தார்கள்.

காலம் ஒரு கனவு காலத்தின் முன்கதையோ ஒரு பொற்கனவு. இன்பச் சுவையின் முத்திரை பெற்ற சம்பவங்கள் என்ருலோ, அவை மாசுபடாத பனங்கள்ளை அளவறிந்து சுவைப்பதற்குச் சமதை ஆகும்.

நிகழ்ச்சிகளில் அவலச் சுவை தெளிக்கப் பெற்ருல் இதயத்திலும் துயரம் தெளிக்கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/39&oldid=611944" இலிருந்து மீள்விக்கப்பட்டது