பக்கம்:மருதாணி நகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மருதாணி நகம்

இதுவே வாழ்வு !

பஞ்சவர்ணம் பதுமையாளுள். காலம் எனும் கம்பங் கூத்தாடியின் கைப்பதுமையாளுள். ஆகவே, அவளது மனம் சுழன்றது மெய் சுழன்றது எண்ணச் சுவையும் சுழன்றது. செய்நேர்த்தி இல்லாத களர்நிலமென அவள் காணப்பட்டாள் நேத்து ராவு அய்யனர் குருதை வாசல் திட்டிலே எப்படிக்கொத்த தீவினை மூளயிருந்துச்சு ! என்னமோ, என்ளுேட அப்பன் ஆயி செஞ்ச புண்ணியந் தான் ஒருவாகிலே தப்பிக்க ஏலுச்சு. ம்... அப்பன் ஆயி மூஞ்சியைக் காணுறத்துக்குப் பொசுப்பு அத்துப்போளு லும், அவுங்க யாபகமானும் வருதே, அதுமட்டுக்கும் கெடும் பில்லே!... ம்...நெனைச்சாக்க, நெஞ்சுக்குருத்து உருகிப்பிடும் போலல்ல இருக்கு !... அந்த ஆம் பிள்ளைங்க சாடாப் பேரும் எம்மாந்துரம் ஆட்டாசி பண்ணி, என்னைப் பாத்து எம்மாங்கொத்த கேள்வி கேட்டுப்பிட்டானுங்க?...புறம்போக்கு இளசுக ! , ம்... வரட்டும், வரட்டும். எப்பவும் காத்து ஒரு திக்காலேவா அடிக்கும்?...ஊம்!

நேசத்துடன் பசுவைக் கூப்பிட கனைப் ಒಸಿ ஒரு

கோலப்பன் கனைத்தான் !

அவர்களை நெருங்கிச் சென்ருள் பஞ்சவர்ணம். “மருவள்தையாச் சொல்லிப்பிட்டேன். தேரோட்டம் கழிஞ்சு ஊர்ப்பஞ்சாயத்திலே ஒங்க அம்மாம் பேரு மான மும் ஆலாப்பறக்கிறதுக்குள்ளாற, இப்ப ஒரு பொம்பளை கைக்கு அலுவல் வச்சுப்புடாதீங்க. மூச்சுக் காட்டாமப் பறிங்க!" என்று எச்சரித்தாள் ; பிறகு, ஏழெட்டுத்தரம் காறிக் காறித் துப்பினுள். எச்சல் அவர்கள் மேல் பட் டதோ, என்னவோ? தறுதலைகளின் ஆறு தலைகளும் ஆறுதல் பறிபோன முடிவுடன் மறைந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/40&oldid=611945" இலிருந்து மீள்விக்கப்பட்டது