பக்கம்:மருதாணி நகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 39

பக்கத்துக் குடியிருப்பிலிருந்து உடுக்குச் சத்தம் மிதந்து வந்தது.

பஞ்சவர்ணத்துக்குக் கள்ளச்சிரிப்பு வந்தது. எம் பிட்டு எச்சி பட்டதுவே பெரும் புண்ணியம்னு நெனச் சுத்தான் அந்த ஆறு சிங்கங்களும் அசிங்கமா நடந்துக் கிடாம நழுவிப்புட்டாங்க போலே! போவட்டும், போவட் டும். னக்காகத் தவம் கெடக்குறவங்களுக்கு இந்த ஒரு மருவாதைகூடக் குடுக்கலேன் னு, நல்லாயிருக்குமா ?”

துணை வந்த அந்தப் புது முகத்தைப் பார்த்து நகை பயின் ருள் அவள். அவனையும் கூட்டிக்கொண்டு உள்ளே கூடத்தில் குந்தினுள். 'ஒங்களை ஒண்ணு கேக்கிறேன். சவாப்புச் சொல்லுவீங்களா?" என்று கேட்டாள்.

"சொல்லுறேனே!” என்று பச்சைப்பாலகன் போலத் தலையை உலுக்கினன்.

விஷம் தோயாத பார்வையையும், வெள்ளையான சிரிப்பையும், சோர்வு மாரு திருந்த முகத்தையும் மறு முறை எடைபோட்டுக் கணித்தபின், "ஒங்க கதையை எனக்கு முழுக்கச் சொல்லோனும்,” என்று இச்சைப் பட்டவனிடம் கேட்பது போல் அவ்வளவு உரிமையுடன் உரைத்தாள். -

எங்கேயிருந்து புறப்பட்டு அத்தனை வேர்வைத் துளி களும் அவன் முகத்தில் கூடாரம் போட்டுக்கொண்ட னவோ? அவன் சாவதானமாக முறுவல் சிந்தின்ை. பிறகு, அடிமடியில் கட்டி வைத்திருந்த ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்து அவிழ்த்தான். தங்கத்தாலிக் சரடு ஒன்று பளபளவென்று மின்னியது. " இதான் பஞ்சவர்ணம் எங்கதை ..." என்று மறுமொழி ஏவினன் கோலப்பன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/41&oldid=611946" இலிருந்து மீள்விக்கப்பட்டது