பக்கம்:மருதாணி நகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ, கொடி மின்னல்

வினு தெரிந்த காலத்தைத் தொடர்ந்து, பஞ்சவர் ணத்தைக் காலவினை மட்டும் தொடரவில்லை ; அதிசயத் திருக்கூத்துக்களும்தான் தொடர்ந்து வந்திருக்கின்றன. அலுப்பின்சுமையை இறக்கிவைக்க எண்ணிய அவள், ஓய்வின் நிழலில் ஒதுங்க எத்தனம் செய்யும் வேளைகளி லெல்லாம்;அவளது நினைவின் நிழல்களே அவளுக்குப் புகல்.அளித்து வந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அவளுக்கு மனத்தின் வலி குறைவதற்குப் பதிலாக, மண்டைஓட்டின் வலி வளரவே செய்தது.

'ஊம், எங்கதையே ஓவியமாத்தான் வாய்ச்சுக்கெடக் குது. நானு பொறந்த கதையை நெனைப்பேன? இல்லே, இப்ப நடப்பிலே நானு எத்தி மிதிச்சுக்கிட்டு வார சங் கடங்களை மனசிலேருந்து வெலக்கியடிப்பேனு ? அதுவும் பத்தாம, இந்தப் புது ஆம்பளை பூடகமாப் பேசி வார விடுகதைப் பேச்சைத்தான் கூட்டிவச்சுப் பாப்பேன ?... ஆத்தா மூத்தவளே ராவு வந்தா, மம்மல் வருது. அது கணக்கொப்ப, இந்தப் பொண்ணுப் பொறந்த சென்மத் துக்கும் ஒரு நல்ல பாதையைத் தடம் காட்டப் புடாதாங் காட்டி? இந்த மட்டுக்கும் எங் குதிகாலிலே குத்தியிருக் கிற நெருஞ்சி முள்ளுகளோட உபாதையவே தாளுறத் துக்கு எனக்குச் செகல் இல்லாம திக்குமுக்காடிக்கிட்டு இருக்கிற நேரத்திலே, மேலே மேலே சோதனைகளை ஏவி என்னை முன்னடியான் சாமி சுடுகாட்டுப்புறத்தாலே வெந்து மடிஞ்சிட் செஞ்சுப்புடாதே. ஊருக்குஒசந்தவளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/42&oldid=611947" இலிருந்து மீள்விக்கப்பட்டது