பக்கம்:மருதாணி நகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 4. Í

குஞ்சுக்கிட்டவா தாய்க் கோழி கைவரிசையைக் காட்டு கிறது?...இது ஒனக்கு அடுக்குமா ? ...' என்று வாதனைப்

பட்டாள் அவள்.

நேத்திரங்கள் சுடுநீரைக் காட்டின : மனம் நினைவு களைக் கொட்டின உந்திக்கமலம் வெய்துயிர்ப்புத் துளி களே ஒட்டின. தாழ்ந்து எழும்பியது நெஞ்சம். தஞ்சம் அடைய அண்டிவந்த அமைதியின் கழலடிகளிலே அவள் பாதம் பதித்துக்கொண்டாள். நாலு சொடுக்குப் பொழுதுக்கு முந்தி கோலப்பன் கோலநகை சிந்தி, கோலம் நிறைந்த தங்கத் தாலிச் சரட்டை ஏந்தி, பின் கதையை மிச்சம் வைத்து, முன்கதை ஒன்றைக் கோடிட் டுக் காட்டிய நிகழ்ச்சி அவள் முன்னே பதம் பிடித்துக் காட்டியது. இதான் பஞ்சவர்ணம் எங்கதை 1 என்று சொன்ன வாய்மொழியின் வாய்மையை உணர வகை புரியாமல், ஊமைக் களு கண்டவள்போல அவள் வெந்து நொந்து மனம்மறுகி நின்ருள். மப்பு மந்தாரம் போடத் தலைப்பட்ட வானம் அவளது முகத்திற்கு இடம் மாற்றிக் கொண்டது, முகில் அணை நிலவாள்ை அவள்.

கோலப்பனின் கைப்பிடிப்பிலே ஊசலாடிய மங்கலச் சரடு அவளுக்கு உடைமை கொண்ட உயிரை ஊசலாட வைத்தது.

"இந்தாப் பாருங்க!...”

“ஆளும் !"

"சாடைகாட்டி, இதான் எங்கதையின்ன தோதுப் பட்டுப் போயிடுமாங்காட்டி?”

jor

"போவாது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/43&oldid=611948" இலிருந்து மீள்விக்கப்பட்டது