பக்கம்:மருதாணி நகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மருதாணி நகம்

'பின்னே? ...”

'பின்னே என்னவாம்?...”

"கதை முச்சூடையும் ஒரே மூச்சிலே புட்டு வச்சாத் தானுங்களே பொண்ணுப் பொறந்தவ நானு அத்துபடி பண்ணிப் புரிஞ்சுக்கிட ஏலும்?”

"மெய்தான், பஞ்சவர்ணம்!”

"அப்படின்,ை ஒங்க கதை சாடாவையும் ஒடை ச்சு வச்சுப்புடுங்க நீங்க!...” . "ஆவட்டும்!" என்று கோலப்பன் விடை பொழிந்த நேரத்தில், வாசற்புறத்தே குரலொன்று குறுக்கிட்டு ஓட்டம் பிடித்து வந்து நின்றது.

பஞ்சவர்ணம் வாசலில் வந்து நின்ருள். கால் கொலுசில் பின்னி இழுத்த சுங்கடியின் முகதலைவை விடுவித்தபடி, பார்வைக்கு அழுத்தம் சேர்த்தாள்.

ஊர்த்தலையாரி பதவிசுடன் நின்ருன்! "கும்பிடுறேன் ஆத்தா!"

"முனியன?...இந்தாலே பாரு, நீ எனக்கு மூத்த ஆளு. கும்புட கை ஒசத்தப்புடாது. மேலுக்குச் சொகமா இருக்கியா? என்ன சேதி, இப்பிடி இங்கிட்டு நாடிப் பறிஞ்சாந்திருக்கே?பட்டாமணிய ஐயா ஊருக்குள்ளாறத் தானே இருக்காவ?”

"எசமான் இப்பைக்கு வெளியே தெருவே நாட மாட்டாங்க. நாளைக்கு மைக்கா நாளு அவுக மண்டகப்படி யாச்சே, தாயி?...ம்...வந்து...ஒங்க காதிலே ஒரு தாக்கலை விழுக்காட்டச் சொன்னுக!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/44&oldid=611949" இலிருந்து மீள்விக்கப்பட்டது