பக்கம்:மருதாணி நகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 43

"சொல்லு!" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, கோலப்பன் தேநீர்க்கடையின் முகப்புப் படிக் கட்டில் வந்து நின்ருன்.

அவனே ஒரு திருப்பம், திருந்திய பார்வை வீசிப் பார்த்து நின்ருன் தலையாரி. பிறகு, இரண்டு தப்படி பஞ்சவர்ணத்தின் வசமாக நகர்ந்து நின்ற வண்ணம், “ஆயி, இ ந் த ஆ ளை அடிச்சுப்போட்டதுக்காக மொதலாளிகிட்ட புகார் வச்சீங்கல்ல, அது விசயமாய்ப் பேசறத்துக்கு ஒங்களை கையோட அவுக அழைச்சுக் கிட்டு வரச் சொன்னங்க!” என்றுதெரிவித்தான்.

அவளது கனிஇதழ்களின் கங்கில் கனிவின் மலர்ச்சி தடம் பதித்தது. "ரொம்ப தங்கமாப் போச்சுப்பா. இந்தாலே, எச்சி துப்பி காயிறத்துக்குள்ளே பறந்து வந்துப்புடுறேன். இம்மாம் பொழுதுக்கும் பசியாறல்லே,” என்று நல்லதனமாகச் செய்தியைத் துாது அனுப்பி வைத்தாள் அவள். பொட்டுப் பொழுதுக்கு முன்னடி நானு கமுக்கமா நேந்துக்கிட்டது ஆயி காதுக்கு எட்டி யிருக்கும்போல. என் விசயத்திலே எட்டியிருக்கல்லே தான் ஆத்தா ஒசந்தவ' அவள் வாய் கொள்ளாமல் தன்னுள்ளே சிரித்துக்கொண்டாள் !

ஆவணத்தாங்கோட்டைக்கு வாய்த்த நல்லதிர்ஷ் டங்கள் ஒன்றிரண்டு உண்டென்ருல், அவற்றின் தலை விதியை உடும்புப் பிடியாகப் பற்றிக்கொண்டிருந்தவர் அவ்வூர் மணியக்காரர்தான். பட்டாமணியம் ஆவுடை யப்ப அம்பலகாரர் என்ருல், எட்டுக்கண் விட்டெரியும்.

கொடிகட்டி வாழ்ந்த பாரம்பரியத்தின் முத்திரையை அவரது அமுதச் சிரிப்பில், அன்பு மொழியில் காண முடியும். அவருக்குக் கிடைத்த சைகோன் சொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/45&oldid=611950" இலிருந்து மீள்விக்கப்பட்டது