பக்கம்:மருதாணி நகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மருதாணி நகம்

பிறந்த மண்ணில் புழுதியை எழுப்பவில்லை; புகழை எழுப்பியது. அவர் பாடுபட்டு தேயிலைத் தோட்டத்தில் கங்காணியாக அலுவல் பார்த்து உழைத்துச் சேகரம் செய்த நிதி அநீதியை அளிக்கவில்லை; நீதியை அளித்தது. அவருக்கு உண்டாகியிருந்த பெரிய மனிதத் தனம், சுற்றுவட்டம் பதினெட்டு வட்டங்களுக்குள்ளாக திருவுளச்சீட்டின் மூலம் நிர்ணயிக்கப்பெற்ற ஆறுகரைத் தலைக்கட்டுக்களுக்குத் தலைமை ஏற்கவல்ல ஊருக்கு உயர்ந்த பதவியை அருளியது. அவர் மனத்தில்.ஊர் மக்கள் வாழ்ந்தார்கள். ஆகவே, அவர் அவ்வூர் குடி ஜனங்களின் உள்ளங்களிலே வாழலானர். -

அம்பலகாரரைப் பற்றி இன்னென்றையும் சொல்லி விட வேண்டும். மனிதர் மிகவும் கண்டிப்பான ஆசாமி. திருகுகள்ளியை வாங்கரிவாளால் லாந்திச் சீவி வீசு வதைப் போன்று கச்சிதமாகப் பேசுவார். 'கச்சிதமாக நடப்பார். ஆத்தாடியோ அம்பலகார அய்யாவுக்கு சொல் பேச்சு தடம் மாறின, கெட்டாப்பிலே கோவம் உண்டன வந்திப்புடுமே! அவருகிட்ட பழகிறதும் தீ கிட்டாலே பழகுறதுவும் சமந்தாளுக்கும். நெருப்பை யாச்சும் ஊதி அணைச்சுப்புடலாம். இவரு கோவத்தை ஊதி அணைக்கவே முடியாதே' என்று தலையாரி அடிக்கடி பாடம் ஒப்புவிப்பான்.

தலையாரி தலை முண்டாசுத் துணியை அவிழ்த்துக் கட்கத்தில் திணித்துக்கொண்டு வாய் பொத்தியவாறு அந்தச் சீமை ஒட்டு வீட்டின் தலைவாசலை மிதித்து நின்ருன். .

அப்பொழுது, சொல்லிக் கூப்பிட்ட மாதிரியாக, அம்பலகாரர் வாசலில் தலையைக் காட்டினர். குமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/46&oldid=611951" இலிருந்து மீள்விக்கப்பட்டது