பக்கம்:மருதாணி நகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 45

பறித்த வெற்றிலைச் சாற்றைக் கூட்டிக் குதப்பி, வலது கையின் இருவிரல் இ டு வ லி ல் வழியனுப்பினர். "என்னடா ஆச்சு?” என்று அதிகார தோரணையில் விணுவிடுத்தார்.

'இப்ப வந்திடுமுங்க அந்தப் பொண்ணு!”

"சரி. நீ போயி, சாம்பான் தாக்கு தொளி உழவுக்கு ஏற்பாடு பண்ணு. உச்சி கழிஞ்சு, ரெண்டு சோத்துப் பறுக்கையை அள்ளிப் போட்டுக்கிட்டு வாரேன்,”என்ருர் அவர். காற்றில் பறக்க முனைந்த கட்டுக் குடுமியின் முடி இழைகளைக் கோதிவிட்டு முடிந்துகொண்டார். திடீ ரென்று மப்பு களைந்தது. வெயில் சு ள் ள ப் பா ய் எரித்தது.

'கங்காணி அய்யாவுக்குக் கும்பிடுறேனுங்க,” என்ற குரல் கேட்டது.

அம்பலகாரர் திசை மாறினர்.

குவிந்த பூங்கரங்களுடனும், குவியாத செவ்விதழ் மூரல் நகையுடனும் பஞ்சவர்ணம் நின்று கொண்டி ருந்தாள்.

'வாம்மா !”

கிழக்கு மேற்காக இருந்த முற்றத்தில் தென்புறம் கிடந்த நார்க்கட்டிலில் அவர் குந்தினர். அவள் அவரது பாதத்தை ஒட்டி அமர்ந்தாள்.

'தாகத்துக்கு மோருத்தண்ணி வேணுமா?"

‘'வேண்டாமுங்க. இப்ப ஒங்க தயவுதாங்க வேணும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/47&oldid=611952" இலிருந்து மீள்விக்கப்பட்டது