பக்கம்:மருதாணி நகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மருதாணி நகம்

“இப்ப மட்டுந்தான ?”

"இல்லீங்க... இல்லீங்க... எப்பவுந்தான்!” என்று சொல்லி, நகத்தைக் கடித்துக்கொண்டாள் அவள்.

முத்தொளிர் பாளைச் சிரிப்பில், முத்துப்பற்கள் மட்டுந்தான பளிச்சிடும்? துல்லிய மனமும் அல்லவா பளிச்சிடுகிறது? அவளது லாவண்யமும் லாகவமும் ஓங்கி வளர்ந்தன. சேலை முந்தானையை இழுத்து விட்டுக்கொண்டு, அவரை ஆழிய பார்வை கொண்டு தயவுடன் நோக்கினுள்.

"பஞ்சவர்ணம் !...

"ஐயாவே!"

"இப்ப என்னை நீ என்ன செய்ய வேணு ம் னு ரோசிக்கிறே?... ஊருக்கு ஊடாலே வம்பு தும்பு வச்சுக் கிட ஒப்பி, நீ நம்ப ஊர் இளசுக பேரிலே தாவா தொடுத் திருக்கே. எங் கடமையைச் செம்மைப்பட செஞ்சுப் பிடுவேன். அட்டியில்லே. ஆன, நாளைப்பின்னைக்கு, இம்மாங்கொத்த நடப்பினலே, ஒனக்கு தீம்பு வராமத் தப்பாதே, ஆயி?...அந்தச்சுருட்டை முடிக்காரப் புள்ளைக் கும் தீவட்டிக் கொள்ளைக் காரனுகளுக்கும் சமதையான போக்கு ஆச்சுதே?. அதுசரி. இந்தப் புதுப்புள்ளை. அதான். கோலப்பன் ஒனக்கு வேண் டி ய வ ன? சொந்தம் சோபாரியா?...இல்லே...?” என்று அத்துடன் உரையாடலைத் துண்டித்து, எதையோ ஒரு விவரத்தை உட்கருத்தாக்கி அறிய விரும்பும் நிலையில் தயங்கினர் மணியகாரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/48&oldid=611953" இலிருந்து மீள்விக்கப்பட்டது