பக்கம்:மருதாணி நகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் கா

பஞ்சவர்ணம் சூட்சுமம் புரிந்தவள் விதரணே பழகியவள். அவளுடைய தோழி கோவிந்தம்மா சொல்லு வாள், " ஏலே பஞ்சவர்ணம், நீ பொண்ணிலேயும் பொண்ணு கடைஞ்செடுத்த குட்டியாக்கும் !" என்று, அவள் வாய்க்குக் குழைவு சர்க்கரையைத்தான் போட வேண்டும்.

பெரியவரின் கேள்விக்கு அவள் பதில் சொல்ல வேண்டும். எடக்குமுடக்காக் கேட்டுப்புட்டாங்காளே ? என்னு சொல்லட்டும்?. நெஞ்சின் அ லை க ளில் நினைவின் அலைகள் முயங்கின. செழிப்பும் சிருங்காரமு மாகக் காட்சி தந்த கோலப்பனை கண்ணின் கருமணி களுக்கிடையில் வைத்து மனக்கண்ணுல் பார்த்தாள். இனம் புரியாத மகிழ்வும் இனம் புரிந்த சாந்தியும் ஏறின, ஏற்றம் புரிந்தன.

"பஞ்சவர்ணம் !...

  • *

“வந்துங்க எனக்குங்க அதை மனசுக்குப் புடிச் சிருக்குங்க!” "அப்பிடியா. சந்தோசம். அவனைப் பத்திய விருத்தாந் தத்தை நீ அறிஞ்சுக்கிட்டியா?”

அவள் தடுமாறினுள். கேட்டப்பவே, பொத்திப் பொத்திப் பேசிச்சே அது?... பிறகு, "ஆமாமுங்க!” என்று கூறிவிட்டாள். -

அதுதருணம், அங்கே வந்து நுழைந்த வளையற் காரக் கிழவர், "என்னத்தைப் பஞ்சவர்ணம் புரிஞ்சுக் கிட்டே நீ ?...அந்த கோலப்பன் படுசுட்டி ஆளாம்!. தில்லுமுல்லு செஞ்சி கம்பி எண்ணினவளும்!”... என்று பதற்றமும் கவலையும் கலந்த குரலில் சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/49&oldid=611954" இலிருந்து மீள்விக்கப்பட்டது