பக்கம்:மருதாணி நகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தொடர்ந்து கவனம் செலுத்தினுல், பிற்காலத்தில் அதனுல் உ ங் க ளு க் கு நல்ல பலன் கிடைக்கும். ஏனென்ருல், கிராமத்து மண்ணைப் பக்திசிரத்தையோடு மதித்துக் கதை எழுதுகிறவர்கள் ரொம்பவும் குறைவு தான். அதனுல்தான் சொல்கிறேன்... சிறுகதைகளுடன் பெருங்கதைகளையும் எழுதுங்கள் என்று!...”

பல்கலைச் செல்வரான கல்கி அவர்கள் என் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் சொன்ன புத்திமதிகளை அவர்களது வாழ்த்தாகவும் ஆசியாகவும் மதித்து வணங்கி, முன்னேறி வருகிறேன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெ ரு ைம யு ம் பெருமிதமும் அடைகின்றேன்.

உங்களுக்குத் தெரிந்த ரகசியந்தான் :

நான் பிறந்த மண் சிற்றுரர்தான். பூவை மாநகர் என்ற பெயரில் சரித்திர முத்திரை ஏதோ இருப்பது போலத் தோன்றுகிறதல்லவா ? ஆமாம், உண்மைதான்! இலக்கிய ஆர்வலர்கள், ஆறுமுகத்தை மறந்தாலும், 'பூவையை மறக்க முடியா தல்லவா ? நான் பிறந்த மண்ணையே என் புனைபெயராகவும் ஆக்கித்தந்த பெருமையும் கல்கி அவர்களையே சார்ந்தது. இப்பொழுது 'பூவை என்ற பெயரிலுள்ள சரித்திர முத்திரை உங்கட் குப் புலனுகியிருக்க வேண்டும்.

கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்கள், “பட்டிக் காட்டு மண் ரொம்பவும் புனிதமானது; தனி மகத்துவம் கொண்டது," என்று அடிக்கடி சொல்வது உண்டு. அது போல, பட்டிக்காட்டுப் பூவையர்க்கும் ஒருதனிச் சிறப்பு உண்டு, புனிதத் தன்மை உண்டு. ஏனென்ருல், அவர் களது மண்வாசி அப்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/6&oldid=611911" இலிருந்து மீள்விக்கப்பட்டது