பக்கம்:மருதாணி நகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பஞ்சவர்ணம்தான் இந்தப் புதினத்துக்கு நாயகி. பஞ்சவர்ணம், அசல் பஞ்சவர்ணக் கிளியேதான். கம்பர் வர்ணிக்கும் பெண் கனி அவள். துடுக்குக்காரி. அதனல் தான் அவளைத் தேடி அல்லல்கள் பல கட்டுச் சோறு கட்டிக்கொண்டு வருகின்றன. என்ருலும், அவள் அதிர்ஷ்டக்காரி ! -

ஆவணத்தாங்கோட்டை ம ண் ணு க் கு உடைய இந்தப் பஞ்சவர்ணம் முதன்முதலாக எனக்குத் தரிசனம்’ தந்தபோது. அவளது தனித்த குணச் சித்திரம் என்னுள் ஆழப் பதிந்துவிட்டது. -

அவள் ஒரு தனிப்பிறவி. அகம் கண்டு, புறம் தெளிந்தவள். புறம் கண்டு, அகம் தெளிந்தவள் ! ஆளுல் ஒன்று. - அவள்பால் இயல்பாகவே ஊறித் திளைத்து விட்டி ருந்த பால் உணர்வுக் கிளர்ச்சியின் காரணமாக, அவளது நடவடிக்கைகள் ஒன்றிரண்டு விரசமாகத் தோன்றலாம்; ஆனல் அவற்றைக் கண்டு யாரும் "மயக்கம் கொள்ளக்கூடாது. காரணம் இதுதான்; அந் நிகழ்ச்சிகளின் பின்னே, புனிதம் மண்டிய குண நலம் ரசமான ஓவியமாகிக் க்ண்மூைச்சி காட்டும்!

கன்னி கழியாப் பெண் அவள். அவள் சிலா வத்தாக மேனி தேய்த்துக் களித்துக் குளிக்கும் கட்டம். இந் நிகழ்ச்சியை ஓர் இளவட்டம் நோட்டம் பார்த்தா ன்ென்ருல், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்க வேண்டர்மா? பார்த்தவன் கோலப்பன். கதைத்தலைவன் பொறுப்பை இன்ைெருவனிடமிருந்து அபகரித்துக் கொண்டவன். கோலப்பன் கோல நகை சிந்தினுலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/7&oldid=611912" இலிருந்து மீள்விக்கப்பட்டது