பக்கம்:மருதாணி நகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அவனைச் சுற்றிச் சுழன்ற புதிர்கள் ஒன்றல்ல; இரண் டல்லவே! இறுதியில், உச்சக்கட்டத்தை உருவாக்கும் புண்ணியம் தீக்குக் கிட்டுகிறது. நெசமான அன்பும் நேசமும் இல்லாத பொய்யான ஆளுகளுக்கு ஊடாலே, பொண்ணுப் பொறந்தவ நானு வாழ்ந்துப் பிடலாம்னு நெனச்சதே குத்தமின்னு புரியறதுக்கு இம்மாங் காலமா யிருக்குது!’ என்று அவளது அபலை மனம் அழுகிறது. ஆனல் அந்த அழுகை பிற்பாடு சிரிக்கும்பொழுது, பஞ்சவர்ணத்திற்கு எடுத்த எடுப்பில் மாரவேள் மன்மத குய்க் காட்சி தந்த அந்தக் கோலப்பன், ஆண்டவனுகக் காட்சி கொடுக்கிருன்.

பஞ்சவர்ணத்தை நான் ஆளவில்லை. அவள்தான் என் பேளுவை ஆட்சி செலுத்தினுள்.

அவள் சிரித்த பொழுதில், நான் சிரித்தேன். அவள் அழுதால், நானும் சேர்ந்து அழுதேன். அதனுல்தான் அவளது கற்பையும் உயிரையும் கட்டிக்காத்துக் காப் பாற்றும் கடமை எனக்குக் கிடைத்தது.

பெண்மையின் அரணுகப் பெண் ைம மதிக்கப் பெற்று, வாழ்த்தப்பட வேண்டும். இத்தகைய சிந்தனைத் தெளிவுடன், நகர்ப்புறத்தே உலவிய பெண்கள் பலரைப் பல கோணங்களில் பார்த்து நான் எழுதியிருக்கிறேன். இதேபோன்று, பட்டிக்காட்டுப் பாவைகளையும் நவீன மாகச் சித்திரித்து மகிழ வேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய ஆசை.

இந்நவீனத்தில், முழுக்க முழுக்க நாட்டுப்புற வாடையே வீசுகிறது. இதுவே என் கனவு. உரை பாடல்களில் தஞ்சை மாவட்ட வழக்குச் சொற்களே

கயாக ஒலிக்கின்றன. இதுவே என் உரிமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/8&oldid=611913" இலிருந்து மீள்விக்கப்பட்டது