பக்கம்:மருதாணி நகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஆனல் ஒன்று. இத்தகைய வழக்குமொழிகளில்ை, கதை ஒட்டமோ, உரையாடல்களின் உட்பொருளோ பாதிக்கப்படவில்லை என்பதை ஏனைய வட்டப் பகுதி யினர் உணரத்தக்க முறையில், முறையான விளக்கங்கள் அங்கங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடும். இதுவே என் இயல்பு !

கொச்சை மொழியில் பாத்திரங்கள் பேசலாகாது என்று வம்புபேசும் அதிசயப் பேர்வழிகளுக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை.

கிராமப்புறச் சூழலை வைத்துச் சிறுகதைகள் எழுது பவர்கள் குறைவு. இதே அமைப்பு டன் கூடிய நவீனங்களை எழுதுபவர்கள் இன்னும் குறைவு. இதி லிருந்து, இம்மாதிரிப் படைப்புக்களை உண்டாக்குவதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை ஒரளவேனும் உங்களால் ஊகிக்க முடிந்தால், அதுவே எனக்கு ஆறுதல் தரும்.

- பூவையின் கதைகள்' என்ற என்னுடைய சிறு கதைத் தொகுப்பினை நடந்த மாதத்தில் வெளியிட்ட அழகுப் பதிப்பகத்தினர் இப்பொழுது மருதாணி நகத்தை எழிலுற வெளியிட்டிருக்கிருர்கள். அடுத் தடுத்து என் புத்தகங்களை வெளியிடவும் இருக்கிருர்கள். பதிப்பகத்தாரின் அன்பு ஆழமானது.

பஞ்சவர்ணத்தை முன்கூட்டியே நீங்கள் அறிந்து கொள்ள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது உமா. £ உமா அதிபரின் அன்பு மகத்தானது.

பூவைமாநகர் 爱 邀

14–1–63 பூவை. எஸ். ஆறுமுகம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/9&oldid=611914" இலிருந்து மீள்விக்கப்பட்டது