பக்கம்:மருதாணி நகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மருதாணி நகம்

"ஆமாங்க!"

"அந்த ஆ ளை ப் பத் தி புகைஞ்சுக் கிட்டிருக்கிற

கதை...?”

y?

"அல்லாம் கட்டுக் கதையுங்க! "ஊம்" என்று நெடுமூச்சு விட்டார் முதியவர். "என்னுங்க அப்பிடி மூச்சு வாங்குறிங்க?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா, பஞ்சவர்ணம் ! ...வந்து...” என்று தம் பேச்சில் இடையீடு கட்டி, இடுப்பில் கட்டி வைத்திருந்த கடுதாசி ஒன்றைப் பிரித்துக் காட்டினர் அவர்.

"என்னுங்க அது...துண்டுக் காயிதம்?”

"பினங்குச் சீமைக் காயிதம்'... என் ஒடப்பொறந்தா மவன் காயாம்பூவை ஒனக்கு நெனப்பு வருதா? ஒரு வாட்டி, அம்மன் கரக ஆட்டத்திலே மையப் புள்ளியா நின்னு ஆடிச்சே, அந்தப் புள்ளையாண்டான் பொறக்கு மாசம் அக்கரைச் சீமையிலேருந்து இங்கிட்டு வந்து குதிக்கப் போவுதாம். சேதி போட்டிருக்குது!...” என்று விளக்கம் ஈந்தார்.

காலத்தின் ஈகையில்ை, நினைவுகள் சட்டை உரித்துக்கொண்டன. பஞ்சவர்ணம் ஒரு கணம், பலாச் சுளைக்கு வசப்பட்ட ஈ ஆளுள் !...

"ரொம்பப் பதனமான இளசாச்சுங்களே அது!” என்று மதிப்பீடு தெரிவித்தாள் கன்னிப் பெண். "ஆமா, அதுக்கு இப்ப என்னுங்க?" என்று குறுக்கே பாய்ந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/64&oldid=611969" இலிருந்து மீள்விக்கப்பட்டது