பக்கம்:மருதாணி நகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 63

“வந்து...அதுக்கும் இதுக்கும் ஒட்டு முட்டுப் பே ச் சி ல் லே!...என்னமோ ரே ச னை ஒடிச்சிது. சொன்னேன், தங்கச்சி!...” என்று நழுவினர் அவர்.

நழுவிய நினைவுகளின் பிடியில் நழுவியவாறு இருந்தாள் பஞ்சவர்ணம்.

ஒரு வியாழச் சந்தைக் கெடு. தடுமன் காய்ச்சல் பிடித்து, ஒண்டிக் கட்டையாகக் கிடந்தாள் அவள். அப்போது வந்த வளையல்காரக் கிழவர் அவள் மீது அன்பு வசப்பட்டு, சுடுதண்ணிர் வைத்துக்கொடுத்து, நொய்க்கஞ்சி காய்ச்சித் தந்தார். அன்று தொட்டு அவள் உள்ளம் தொட்டவரானர் கிழவர் !...

"பஞ்சவர்ணம்!. இந்த ஊருப் பெரிய எடத்துப் புள்ளேங்க கிட்டேயிருந்து ஒனக்கு ஏதாச்சும் சாமான் சட்டு வந்திச்சா? ... இல்லாததும் பொல்லாததுமான பேச்சு ஊர்ப்புறத்திலே நடமாட்டம் காட்டுதே, தாயி?...”

"ஐயா!...” என்று அழைத்தாள் அவள். பிறகு குதிகாலின் அடியில் படிந்து கிடந்த குறுவி மணலை ஒரு கொத்து அள்ளி எடுத்தாள். "இந்தாப்பாருங்க...இந்த மண்ணுதான் நம்மளோட வாழ்க்கைக்கு ஒரு நீதி பகவானுட்டம் இந்த மண்ணிலே கண்ணு முளிக்கிருேம்: இதே மண்ணிலேதான் கண்ணை மூடுருேம்...! இதுக்கு இடைப்பட்ட ரவை நேரத்துக்குள்ளே, இதே மண்ணை நம்பி மனுசங்க கட்டி விளையாடுற வேடிக்கைக் கூத்து இருக்குதுங்களே, இதுகளுக்கெல்லாம் நாம ஈடு குடுத்துத்தான் தீரவேணும். ஆனதாலே, இந்த விதிக்கு நானு மட்டும் தப்ப முடியுங்களா?...என்னை என் மச்சான் நம்புது; நீங்களும் நம்பித்தான் தீருவீங்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/65&oldid=611970" இலிருந்து மீள்விக்கப்பட்டது