பக்கம்:மருதாணி நகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்குல் நிலவு

பொன்முலாம் பூசினுற்போல செழித்துக் கொழித்துக் காட்சியளித்துக் கொண்டிருந்த சோளமணிக் கதிர்களு டன் கொஞ்சி மகிழ்ந்து திளைத்து விளையாடிக்கொண்டி ருந்த பூஞ்சிட்டுக்கள், கவண் கற்களின் உதவியில்லாம லேயே சிட்டாய்ப் பறந்தோடின. பட்டுத் துகள் பட்டுத் தெறித்ததற்கு இணையாக, ஒளிவிட்டு-ஒளி வெட்டிப் பாய்ந்து, சிதறிப் படர்ந்த தீக்குமிழ்கள் காற்றிலும் கடுகிப் பறந்தன காற்றுடன் மறுவிப் பிணைந்தன. சோளமணி களைத் தின்றுவிடாமல்இருக்கவேண்டிப்பரண் அமைத்துக் கட்டப்பட்ட அந்தச் சோளக் கொல்லைப் பொம்மையின் பரிதாபகரமான உருவம் மேலும் பரிதாபத்தை வருந்தி அழைத்துக் கொண்டது. வாழ்விற்கும் வீழ்ச்சிக்கும் ஒரே துருவப் பார்வையாக அமைந்து உண்மைச் சாட்சி'

சொல்லியது அது!

பஞ்சவர்ணம் தீயிடை மெழுகானுள் ; கங்குலின் நிலவாள்ை மணல்தரை மீன் ஆளுள் வலை கண்ட பிணை ஆளுள். வாழ்வை ஆரம்பித்து வைத்து, வாழ்விற்கு வாழ்த்துத் தெரிவித்து, வாழ்வை ஒத்திகை செய்து பார்க்கத் துடித்துக்கொண்டிருந்த அவள் - நல்வாழ்வு கிட்டவேண்டுமே யென்று நேந்து கொண்டு தவம் இருந்த அவள்-கனவுகளைத் தன்னுடைய கயல் நீலவிழி மணிகளிலே வளரச் செய்து, அந்தக் கனிவின் கனவில் பண்புடன் ந ட மா டி த் திரிந்த அவள், இப்பொழுது "இனிமே நானு செத்துமடிஞ்சு சிவலோகம் போனதாட் டமேதானுக்கும்!” என்று கனன்ருள்; கதறினுள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/67&oldid=611972" இலிருந்து மீள்விக்கப்பட்டது