பக்கம்:மருதாணி நகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மருதாணி நகம்

சுழன்ருள் வளையல் வியாபாரியுடன் உரையாடிக்கொண் டிருந்த பேச்சை அந்தரத்தில் நிறுத்திவிட்டு, அந்தர மாகச் சுற்றிய தீக்கங்குகளை நாடி ஓடினுள் அவள். பூங் கரங்களை வீசியவாறு கணப்புக் கட்டையாய்ப் பொலிந்த கருவேலங்கழியைப் பலம் பாய்ச்சி வெளியே இழுத்தாள். பிறகு, பிடிமண்ணை உள்ளங்கை கொண்டமட்டும் அள்ளி எடுத்து நெருப்பின்மீது காட்டத்துடன் வீசியெறிந்தாள். எரிந்த காட்சி அவ்வளவு லேசில் நின்றுவிடுமா ? ஆத் திர்த்தின் எல்லையைக் கடந்து வெளியே வந்த வேளையில் தன் மேனியில் பச்சைத் தண்ணிர்த் துளிகள் பட்டு விலகியதை அவள் உணரவே, பின்புறம் சாரையாய்த் திரும்பலானுள்.

கோலப்பன் கடகால் நிரம்ப நீர் எடுத்து வந்து, தீயை நோக்கிக் கொட்டினுன். கொடிகட்டிச் சிரித்த நெருப்பு கோடி காட்டி அணையத்தொடங்கிற்று. வேதனை ஒரே மூச்சில் அடங்குவது கிடையாது. தீயும் அவ்வினந் தானே ? வயசை மறந்து விரிந்துகிடந்த வஞ்சத்தை மறக்க முடியாமல், தூக்கமாட்டாத சோர்வுச் சுமையுடன் தூக்கிவந்த செப்புக்குடத்தை சோ ள க் .ெ கா ல் லை ப் பொம்மையின் பாதத்தில் போட்டு விட்டு உட்கார்ந்தார் கிழவர். காரை முள் காலப் பதம் பார்த்த அதே சடுதியில் கருக்கரிவாள் ஒன்றையும் அவர் பார்த்துவிட நேர்ந்தது!

வளையற்காரரின் கையிலிருந்த கருக்கரிவாளை எட்டி நின்றவாறு பார்த்துவிட்ட கோலப்பன் அவரை நோக்கி நடந்துவந்தான். கிழவரைக் கூப்பிட அவருடைய பெயருக்காக, தும்மல் பறிக்கும் நேரம்வரை தயங்கினன். அந்தப் பெயர் நினைவை மறக்கவே, 'ஐயா !” என்று விளித்துக்கொண்டு கீழே குனிந்து, அவருக்கு அருகாகக் குந்தினுன். லேஞ்சில் கட்டிவைத்திருந்த தீப்பெட்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/68&oldid=611973" இலிருந்து மீள்விக்கப்பட்டது