பக்கம்:மருதாணி நகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 67

எடுத்து ஒரு குச்சியைக் கிழித்தான். தி வந்தது. தீப் பிடித்த பொம்மை கறுப்புமயமாகக் காட்சியளித்தது. வைக்கோலும் துணிக் கிழிசலும் நிறைந்திருந்த பொம்மை பசித்த வயிராக ஏங்கிக் கிடந்தது. அடுத்த தீக்குச்சியைத் தீமருந்தில் உரைத்தபோது, பஞ்சவர்ணம் அழைக்கும் குரல் ஒட்டி வந்தது. ஆகவே, அவன் கையிலிருந்த நெருப்பை ஊதி அணைத்தவகை, அவளை நோக்கி ஓட்ட மெடுத்தான்.

கோலப்பன் குறிவைத்துச் சேர்ந்த இடத்திலே, பஞ்சவர்ணத்தின் உடும்புப் பிடிப்பில் காத்தான் முடங்கிக் கிடந்ததைக் கண்டு தெளிந்தான். அன்னிக்கு ஒரு தக்கம் இந்த மனுசன்தானே இங்கே நாடிவந்திருந் தான் ? அவன் தன்னுள் கிளை விட்டுக் கிளை பரப்பி நின்ற ஐயத்தைப் போக்கவோ, தன் ஐயத்திற்கு வேறு போக்கிடம் காட்டவோ பிரயத்தனப்படாமல் நின்ற நிலை யிலே, அவன் ஒரு காட்சியைக் கண்டான். ஆந்தக் காட்சி ; பஞ்சவர்ணம் பத்திரகாளியாகி உருமாறிஞள்: எதிரே கைகட்டி, வாய் பொத்தி நின்ற காத்தானின் சேக்கைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கியதோடு அமைதி கொள்ளாமல், வாய் வழியே ஊறிய எச்சிலைத் தரையில் துப்பினுள்.

"தூத்தேரி! நீயும் ஒரு ஆம்பளைச் சென்மமா? ஒனக்குக் கஞ்சித்தண்ணி ஊத்துறவங்களுக்கு ஒனக்கு உண்டான மட்டுக்கும். கடமையைச் செய்யிறதுதானே? அதுக்காக, ஏதுக்கு இப்படி வந்து ராவுப் பொழுதிலே தீவைக்க மனசொப்பினே ? பணத்திலே புரளுரவுகளுக்கு பணத்தோட கயிட்டம் புரியாது; ஆன, என்னை மாதிரி மண்ணுமேலேபுரளுற ஏழை பாழைங்களுக்குப் பணம் காசைப்பத்தி ரொம்ப சிலாவத் தாத் தெரியுமே! நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/69&oldid=611974" இலிருந்து மீள்விக்கப்பட்டது