பக்கம்:மருதாணி நகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மருதாணி நகம்

தீ வைச்ச கை யோடவே, விசயம் என் நேத்திரத்துப் போக்கிலே பட்டுச்சுது தப்பிச்சேன் 1 இல்லாங்காட்டி எனக்கு இரு க் க க் கூ டி ய இந்தப் பச்சைச் சோளக் கொட்டைங்ககூட கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமப் பூடுமே? நீ ஒதுங்கின சாதியிங்கிறதுக்காக நான் ஒனக்கு 'மாப்பு விட்டேன். இல்லேன்ன, இப்பவே ஒன்னை அந்தத் தெக்குப் பக்கத்துக்குப் புளியமரத்து ஒண்டலிலே கட்டிவச்சி, விளாசியிருப்பேன்! அ ப் பாலே, ஒம் மொதலாளி வந்து என்னை என்ன செஞ்சிடுவாரின்னும் ஒரு கை பார்த்திக்கிட்டுருப்பேன் 1 ம், நானு கைகூடி வர லேங்கிறதுக்காவ, எம்புட்டு மண்ணிலே அநியாயம் செஞ்ச பாவத்துக்கு, ஒருநாள் இல்லாட்டி ஒருநாள், ஆத்தா சுமையாக் கூலிகுடுக்காமயா இருக்கப்போருள்?"

வெஞ்சினம் வறுத்தெடுத்துக் கொட்டிய சொற்கள் சூடு ஆறவில்லை.

அதற்குள், வளையற்காரர் சோனமுத்து அம்பல காரர், கையில் தவழ்ந்த கருக்கரிவாளுடன் அங்கு வந்தார் அவளிடம் அதைக் காட்டினர். நிலாக் கதிர்களில் சூரிக் கத்தி பளபளத்தது. அதை 'லபக்கென்று லாந்திப் பறித்துப் பார்த்தாள். முத்தையன்' என்ற எழுத்துக்கள் தேய்ந்திருந்தன. அக்கரைச் சீமைப் பணத்துக்கு இம்மாங்காணும் மவுசு இருக்கில்லே? வரட்டும், வரட்டும் ஒரு கை பார்த்துக்கிடுறேன். அல்லாம் அந்த முத்தையன் பண்ணுற தகிடுதத்தம்தான் புரிஞ்சுக்கிடுச்சு! புரிஞ்சுக் கிட்டேன்!

கண்விழித்துக் கண் மூடுவதற்குள், காத்தான் சூழ்ந் திருந்த சப்பாத்திக்கள்ளி வேலியைத் தாண்டிக்கொண்டு

ஓடினன்.அவனுடன் கூட வேருெரு உருவமும் எழுந்து விரைந்து பாய்ந்து மறைந்தது. கையிலிருந்த அரிவாளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/70&oldid=611975" இலிருந்து மீள்விக்கப்பட்டது