பக்கம்:மருதாணி நகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 69

கைக்குள் லாகு கொடுத்து அமுக்கி நீட்டி வீசிள்ை. 'ஆ' என்ற குரல் கேட்டுமறைந்த அதே அவசரத்தில், அந்த ஆளும் மறைந்துவிட்டான் அந்தக் கத்தி திரும்ப வும் அவளிடம் சரணடைந்தது!

அணி நிலவு அழகின் மணிமண்டபமானது.

பஞ்சவர்ணத்திற்குத் தன்னைச் சூழ்ந்திருந்த இருள் பயம் கொடுத்தது. கொடுக்கப்பட்ட பயத்தினின்றும் பயங்கரக் கற்பனைகள் முளைத்தன. இதே நிலையைத்தான் முதியவரும் நிர்ணயம் செய்தார். ஆனால், கோலப்பன் மட்டும் எதற்கும் கலங்காத பாவனையில், கள்ளமின்றி மனம் விட்டுச் சிரித்தான். "நீ யாதொன்னுக்கும் மலைப் புத் தட்டி நிக்காதே, வருணம் நானு இருக்கையிலே, நீ ஏதுக்கு வீணு மனசைக் குலுக்கிக்கிடுறே?" என்று கேட்டுச் சாந்திப்படுத்தினன். அச்சொற்கள் பெண்ணுய்ப் பிறந்தவளுக்கு அளித்த ஆறுதலின் கனபரிமாணம் இவ்வளவு அவ்வளவா?

வளையற்காரரும் கோலப்பனும் வாசலில் துண்டை உதறிப் போட்டுக் கட்டைகளைச் சாய்த்தார்கள்.

ஆளுல், பஞ்சவர்ணம் மட்டிலும் நடு ராத்திரிக்குப் பிறகுதான் கண்களை மூடினுள். அப்பொழுது அவளது தலைச்சுமை இறங்கியிருந்தது. நல்ல மூச்சு இப்பத்தான் அண்டுது. அந்தப் பயலுங்க தந்த துணிமணிகளை அதே சோளக்கொல்லைப் பொம் ைம எரிஞ்ச எடத் துக்குக் கீழே தீ வச்சுப் பொசு க் கி ப்பு ட் டே ன். ரெண்டொரு நகைநட்டையும் காடுமாத்தி வீசிப்புட்டேன். இனிமே எம்பாடு விட்டிச்சுது! ஊம். விடிஞ்சாக்கப் பஞ்சாயத்து!...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/71&oldid=611976" இலிருந்து மீள்விக்கப்பட்டது