பக்கம்:மருதாணி நகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 71

காத்தானை பஞ்சவர்ணம் வூட்டுக்கு ஏவிளுைமே நம்ம பங்காளிப் புள்ளை முத்தையன்? இதுக்கு என்தான் இப்பிடிக் கோணப்புத்தியோ?”

'கோணவகிடு எடுத்தாக்க, அப்பாலே புத்தியும் கோணமாணலாப் போயிட வேண்டியதுதானுங்களே மாமு?”

இப்படி ஓர் உரையாடல்.

இதோ வேறு இருவர் :

“என்னுங்கிறேன் காவான்னு! இப்ப நடக்கப்போற பஞ்சாயத்தாட்டம்...இந்த அஞ்சு வருசத்துக்குள்ளே... இம்மாம் பெரிய பரபரப்பை வேறெதுவும் உண்டாக் கினது கிடையாதாம். எனக்குக் கூட ஒண்ணுமே மட்டுப் படலே பாவம், அந்தக் குட்டி பஞ்சவர்ணத்தோட வாழ்வும் தாழ்வும் மணியக்காரர் நாவிலேதானுக்கும் குந்தியிருக்குது !”

“நூத்திலே ஒரு தாக்கல் தம்பி!”

சோமு அம்பலம் கேணி :

"ஆத்தா அஞ்சுகம் பார்த்தீயாடி ஒங்க ஆச்சிமவ. பஞ்சவர்ணத்துக்கு வந்த இடுசாமத்தை? ரவையிலே பறிஞ்சாந்து, தீப்பந்தம் வீசிப் பறிஞ்சிருக்காணும் யாரோ ஒரு போக்கணங்கெட்ட பயமவன் வசங்கெட்ட இளவட் டங்க பணத்தை வீசி பொண்ணுப்பொறந்தவ மனசைப் பிடிச்சுப்பிட கணுக் காணுருங்களே, இந்தக் கதையை எங்கனே போய்ச் செப்புறதாம்?”

"அயித்தை, ஒங்களுக்குப் புரியாத தவசல் இல்லே பஞ்சவர்ணத்தைச் சாமானியமா நாம எண்ணப்புடன்து அது அல்ப சொல்பமான பொண்ணு இல்லவே இல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/73&oldid=611978" இலிருந்து மீள்விக்கப்பட்டது