பக்கம்:மருதாணி நகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மருதாணி நகம்

அதுவே நெருப்பு கணக்குதான்! ஆனபடியாலே, வேறே நெருப்பு எதுக்கும் மசியமாட்டா ஊர்ச்சனங்க ஒண்ணடி மண்ணடியாச் சேர்ந்து எதிர்த்தாத்தான் என்ன ? அல் லாருக்கும் மேம்பட்டவ ஒருத்தி ஊருக்கு ஒசந்த தலையா மானத்திலே குந்திக்கிட்டு இருக்கையிலே, யாரோட திரு விளையாட்டு வந்துதான் கன்னி கழியாப் பொண்ணை என்ன செஞ்சுப்பிட முடியும் ?”

"ஆமா, ஆமா! நல்லாச் சொன் னிங்களே! உருப்படியான பேச்சுத்தான், அயித்தை !”

இந்தப் பேச்சுக்கு அனுசரணையாக நின்ருர்கள் ஏனைய பெண்கள்.

நெருஞ்சிமுள் பத்தையில் கால் பதிந்துவிட்ட நிலை யில் பஞ்சவர்ணம் அதிர்ந்தாள் உள்ளத்தின் வேதனை உடல் முழுவதற்குமாய்ப் பரவி ஊடுருவியது. ஊடுருவித் துளைத்த துயரங்கள் அவளே கணுக்காலுக்குக் கணுக்கால் அரித்துக் குடைந்தது. வண்டு குடைந்த பழத்திற்கு ருசி மிகுதி. ஆல்ை, துன்பம் குடைந்த மனத்துக்கு எல்லை யிலாத் தொல்லைதான் நிகர லாபம்.கருவில்அமைந்தபடி', வாழ்வின் சூட்சுமங்கள் அமைத்துக் காட்டும் ஐந் தொகையின் புள்ளிக் கணக்கு இது !

ஒன்றுவிட்ட உறவென வாய்த்திட்ட சின்னத்தாளை பலகாரக் கடைக்குக் காவல் வைத்தாள். அவளுக்குக் காவல் நிற்கும் தலைச்சுழியை எழுதிக் காட்டிய கோலப்ப னிடம் நெருங்கி என்னவோ அந்தரங்கம் பேசிள்ை. குளித்து முழுகிளுள் மஞ்சள் பூச்சு துலாம்பரமாய்த் திகழ, தும்பைப் பூவின் காம்பீர்யம் மின்ன விளங்கிள்ை அவள். கொட்டடிப் புடவையை ராமேசுவரம் வர்ணப்

பேழையிலிருந்து எடுத்துக் கட்டிக்கொண்டாள். அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/74&oldid=611979" இலிருந்து மீள்விக்கப்பட்டது