பக்கம்:மருதாணி நகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 73

பூச்சிகளை விரட்டிவிட்டு, நாவற்பழ நிற ரவிக்கையைப் போட்டுக் கொண்டாள். ரவிக்கையின் கீழ்ப்பகுதி முடிச்சை இறுகக்கட்டி முடித்துக்கொண்டே, ஈரத்தட்டி ஒட்டை வழியே பார்வையிட்ட பொழுது, ஜோடி விழி களின் ஆர்வத்துடிப்பையும் அவள் கண்டுகொள்ள வாய்த்தது. இந்த மச்சான் துடுக்கான அவசரக்கார ஆம்பளை உதடுகளின் மடிப்பில் சிரிப்பு மடியலாமா?

பஞ்சவர்ணம் பற்களைக் கடித்துக்கொண்டாள். முன் இரவின் பின்பகுதியில் கோலப்பன் மெல்லவந்து தன்னை நெருங்கியதைக் கண்டு அ வள் கண்டங்கருவளைப் பாம்பென பதட்டம் பூண்டு எழுந்து துடித்தாள். "யாரு நீங்களா?... வாய் வார்த்தையாய் அப்பவே எச்சரிக்கை செஞ்சுபுடத்தான் ரோசிச்சேன். ஆ,ை இந்த ஊரு சனங்களுக்குத் தென்படாத நல்ல மனசை-ஒங்க நல்ல மனசை நான் இனம் தண்டதாலே, மூச்சுக் காட்டாம குந்திக்கிட்டேன். இப்ப சொல்லுறதை மறந்துப் புடாதீங்க. இந்தக் கிணத்து நீரை வெள்ளம் கொண்டு பூடாதுங்க. ஆனதாலே, நம்ப ரெண்டு பேரும் ஊர் மெச்ச கண்ணுலம் கட்டிக்கிடுறத்துக் குள்ளாற. இம் மாதிரியான எந்த ஒரு த ப்பு எண்ணமும் இனிமே ஒங்களுக்கு உண்டாகப்புடாதுங்க!... ஒங்களை நம்பி யிருக்கிற என்ன ஊருக்காரங்க கடைசி பரியந்தம் நம்புறதுக்கு வகை செஞ்சு கொடுங்க போதும்!...” என்று பதனமாகப்பேசி, கோலப்பன் படுக்கவேண்டிய இடத் திற்கு இலட்சுமணன் கோடு ஒன்று கிழித்துவிட்டு, மீண்டும் ஒரு சிரிப்பைக் கொட்டிச் சென்ருள் அவள்.

குவான். சாமி சத்தியம் இது!” என்று தனது' ର

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/75&oldid=611980" இலிருந்து மீள்விக்கப்பட்டது