பக்கம்:மருதாணி நகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மருதாணி நகம்

சொற்கள் நந்தியாவட்டப் பூக்களைப் போல துலாம்பர மாக ஒலித்து வெண்மை காட்டின!

அவள் வெளிப்புறம் வந் தாள். கோலப்பனை நோக்கினுள். "மச்சான், புறப்படுங்க. வெய்யிலு கல்லா வுக்கு நெருங்கிக்கிட்டிருக்குது. மணியக்கார ஐயா வந்திருப்பாங்க,” என்று துரிதப்படுத்தினுள். மெனக் கெட்டு சிவப்பு ரேக்கு சொட்டச் சொட்ட தேநீர் தயாரித்தாள். அவள் ஒரு மடக்குப் பருகினுள்; அவனுக்கும் ஒரு குவளை நீட்டினுள். கையெடுத்துக் கும்பிட்டபடி, அவள் கடையை விட்டுப் புறப்பட்டாள். கோலப்பன் திருநாகேஸ்வரம் துவாலையைத் தோளில் சரியவிட்டவாறு அவளைப் பின்தொடர்ந்தான். அவர்கள் இருவரையும் பின் தொடர, அங்கங்கே பல பல கண்கள் காத்திருந்தன என்பது பரம ரகசியமாக்கும்!

ஐயனுர் குதிரையை எல்லைக்குக் காவல் வைத்து, உருவாகத் தக்க நீதியின் உச்சாடனத்திற்கு ராக்காச்சித் தேவதையை முன்புறத்துச் சாட்சியாகக் கொண்டு "ஊர்ப் பஞ்சாயத்து கூடியிருந்தது. ஊர்க்குடியிருப்பின் ஆறுகரைக்காரர்களுக்குத் தலைமை ஏற்ருர் ஆவுடையப்ப அம்பலக்காரர். உருவு முடி' போடப்பட்டிருந்த குடுமி யின் மயிரிழைகள் அடிக்கடி காற்றில் பறந்துகொண்டி ருந்தன. வாய் எச்சிலை உமிழ்ந்து கொட்டிவிட்டு, விரிப்பில் வந்தமர்ந்தார் அவர். பிறகு, ஒரு தரம் சுற்றிச் சூழ நோக்கினர். வீரப்பன், கோவிந்தன், கருப்பையா, சன்னசி, ரங்கன் ஆகியோர் ப தவிசாக ஒருபுறம் நின்ருர் கள். மறுபக்கத்தில் பஞ்சவர்ணம் கைகட்டிக் காத்து நின்ருள். சற்றே விலகி, நாலுமுழம் தள்ளி, கோலப்பன் நின்ருன். சனி மூலையில் புளியமரத்துண்டில் காத்தான் கட்டப்பட்டிருந்தான். ஆமா, இந்த வியாச்சியத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/76&oldid=611981" இலிருந்து மீள்விக்கப்பட்டது