பக்கம்:மருதாணி நகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியின் தோழி

ஈர்வலியும் கையுமாக வந்தாள் கோவிந்தம்மா. வந்த வள், அந்தத் தேநீர்க்கடையை இமை வலிக்கப் பார்த் தாள் பார்த்தவளுக்கு இமை மாத்திரம் வலிக்கவில்லை. நெஞ்சும் சேர்ந்து வலித்தது. வாளிப்பான மார்பகம் எம்பித் தணிந்தது. ஆமா. இங்கிட்டு ஒரு ஈ, காக்காயைக் காணமே ?... அந்த அசலூர் மச்சான் காரரையும் காணுேம்; பஞ்சவர்ணம் அக்காவையும் கண்டுதண்டிக்கிட ஏலலை. நடக்கிற கதை காரணங்களுக்கு ஊடாலே ஏதாச்சும் புதுக்கதை முளைச்சிருக்குமா ? அல்லாம் மப்பும் மையமுமாகத் தோணுதே? என்று நினைவுகளைச் சரம் கட்டித் தொடுத்தாள். மனமென்னும் பூஞ்செடியிலிருந்து

எழுந்தது சுகந்தமா? அல்ல ; வேதனை !

குழப்பம் விளைவித்த அல்லலும், அல்லலில் பிறந்த நெட்டுயிர்ப்பும் கூடி முயங்கிய தருணத்தில், கோவிந் தம்மாவின் மனம் நெகிழ்ந்தது. மன நெகிழ்வின் ஈரத் தில், ஈரம் தோய்ந்த வதனம் ஏந்தி வந்த பஞ்சவர்ணத் தைத் தரிசித்தாள். அந்தத் தரிசனம் பலித்தது. நெஞ் சிலும் நினைவிலும் ஒயிலாடப்பார்த்த பதுமையை நேருத் திரமாகக் கண்டாள். "அக்கா... அக்கா ! என்ன, மூஞ்சி சோம்பிக் கிடக்குது?... ஏதாச்சும் தகவல் கிகவல் நடந்திச்சா?..." என்று மூச்சுவிடாமல் கேட்டாள்.

பஞ்சவர்ணத்திற்கு அழுகை முட்டியது. கழுத்தில் விழுந்திருந்த கருகுமணிச்சரம், எழில் கொழிக்கும் நெஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/84&oldid=611989" இலிருந்து மீள்விக்கப்பட்டது