பக்கம்:மருத்துவக் கலைச் சொற்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை தமிழில் மருத்துவ அறிவியல் நூல்கள் பெருமளவில் வெளிவர வேண்டும் என்றும், தமிழில் மருத்துவம் பயிலும் நிலை உருவாக வேண்டும் என்றும் அனைவரும் விரும்புவதுண்டு. எனினும் அயல் மொழிகளில் வெளிவருவது போன்று தமிழ் மொழியில் மருத்துவ நூல்கள் வெளிவருவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இம்முயற்சிக்கு நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமையே ஆகும். எனினும் ஆர்வலர்கள் முனைப்புடன் முயலும்போது இப்பணிக்கு முட்டுக் கட்டையாக நிற்பன கலைச்சொற்களாகும். இதனால் பலரும் ஆர்வமுடன் முன்வந்து இப்பணியை மேற்கொள்வதில்லை. எனவே நூலாக்கப் பணியினை ஒருபுறம் ஊக்குவிக்கும் நேரத்தில் மறுபுறம் கலைச்சொல்லாக்கப் பணியையும் முடுக்கிவிட வேண்டும். இவ்விரு முயற்சிகளும் மேலோங்கும்போது மருத்துவ நூலாக்கப் பணி சிறக்கும் என்பதில் ஐயமில்லை . முயக்கு ஆர்வது. பல பொறியியல் முதன்மை 1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலகட்டத்தில் திட்டம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமையப்பெற்றது. அன்று அதன் முதன்மைப் பணியாகத் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் நூல்கள் எழுதும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல மருத்துவர்கள் தமிழில் நூல் எழுதும் பணிக்கு ஆர்வத்துடன் முன்வந்தனர். எனினும் அவர்களின் பெரும் முயற்சிக்குத் தமிழில் நிகரன்கள் {Equivalents) அல்லது கலைச்சொற்கள் இல்லாமையால் பின்னடைவு ஏற்பட்டது. இச்சூழலில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல மருத்துவ நூல்கள், கட்டுரைகள், இதழ்கள், கலைச்சொல் பட்டியல்கள் போன்றவற்றில் இருந்து மருத்துவக் கலைச்சொற்கள் சேகரிக்கப்பெற்றுத் தொகுக்கப்பெற்றன. இத்தொகுப்பு அன்று உருளச்கச் செய்யப்பெற்று அளிக்கப்பட்டது. அன்றைய சூழலில் மருத்துவ நூல் எழுத முன்வந்த ஆசிரியர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் துணைபுரிந்தது.