பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியது.

biosensors :உயிரியல் உணர்விகள்: தோல் வெப்பநிலை, புற அழுத்தத்தினால் ஏற்படும் ஈரப்பதன் அல்லது உயிரியல் மாறுபாடுகள் போன்ற உயிரியல் செயல் முறைகளின் விளைவினை அளவிடுவதற்கான நுண்கருவிகள்.

biotechnology :உயிரியத்தொழில்நுட்பம் : தொழில்நுட்பம் பற்றிய அறிவியல் ஆய்வில் உயிரியல் அறிவினைப் பயன்படுத்துவதும், உயிரியல் ஆய்வில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் உயிர்த்தொழில்நுட்பம் எனப்படும்.

biotin : பயோட்டின் :பி-இரண்டு (B-2) எனப்படும் ஊட்டச்சத்துக் கலவைக் கூட்டில் அடங்கியுள்ள 'வைட்டமின H'எனப்படும் ஊட்டச்சத்துக் கூறு. இந்த ஊட்டச் சத்துக் குறைபாட்டினால், தோல் அழற்சி நோய் உண்டாகும்.

biparous : இரட்டை ஈற்று : ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுதல்.

piperidan :பைபரிடன் :தானியங்கும் நரம்பு மண்டலத்தின் மீது செயற்படும் ஒரு பகை மருந்து. பார்க்கின்சன் நோய்க்கு இது பயன்படுகிறது

Bipp : எலும்பழற்சிக் கட்டுமருந்து : பிஸ்மத் (நிமிளை) சப்னுடரேட் அயோடாஃபார்ம், திரவ பாரஃபின் கலந்த குழம்பு கடுமையான நோய்க் கிருமித் தடைக்காகக் கட்டுப் போடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

birth : பிறத்தல்; பிறப்பு : தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும செயல். தாய்க்கு இடுப்புவலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது.

bisacodyl : பிசாக்கோடில் : ஒரு செயற்கைப் பேதி மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளும் போது, ஈர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், இரைப்பையின் உட்சுவரைச் செயலாற்றத் தூண்டுகிறது . இது, மலக்குடல் சிறுநீர்த்துளையினுள் நுழைத்து அங்கேயே கரைய விட்டு விடப்படும் குளிகைகளாகவும் கிடைக்கிறது.

bisexual :இருபால் கூறினம்; இரு பாலினம் : இருபால் உறுப்புகளையும் ஒருங்கேயுடைய உயிரினம். ஒருவரிடமே ஆண் பெண் கருப்பை இரண்டுக்கும் பொதுவான திசு இருக்குமானால், அவர் உண்மையில் இருபால் கூறு உடையவராவார். ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுறவு கொள்ள விழைபவரையும் இது குறிக்கும்.

Bisolvin :பைசால்வின் புரோம் ஹெக்சைன் எனும் மருந்தின் வாணிகப் பெயர்.

bistoury : கூர்ங்கத்தி : ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை , பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்படுகிறது

Bitot's spots:பிட்டோட் புள்ளிகள் . விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர் படலம், சிம்புத்துணுக்குகள். நுண்ணுயிரிகள் ஆகியவை வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது.

bitters: கைப்பான் மருந்து : கசப்புப் பூண்டு வகைகளிலிருநது வடிக்